உலகக் கோப்பை தொடரில் தேர்வாக சஞ்சு சாம்சன் இதனை செய்ய வேண்டும் - வாசிம் ஜாஃபர்!

Updated: Tue, Jul 25 2023 16:28 IST
Image Source: Google

ஐசிசி நடத்தும் ஒருநாள் உலகக் கோப்பை தொடர் இந்தாண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த முறை உலககோப்பையை இந்திய கிரிக்கெட் வாரியம் எடுத்து நடத்துகிறது. நான்காவது முறையாக இந்திய கிரிக்கெட் வாரியம் ஒருநாள் உலகக் கோப்பையை நடத்துகிறது. கடைசியாக 2011 ஆம் ஆண்டு எடுத்து நடத்தியது. அப்போதுதான் இந்திய அணியும் கடைசியாக உலககோப்பையை வென்றது.

அதற்கு அடுத்ததாக, 2015 மற்றும் 2019 உலககோப்பைகளில் இந்திய அணி வெற்றி பெறும் அணியாக கருதப்பட்டது. ஆனால் கடைசியில் கோப்பையை வெல்ல முடியவில்லை. இம்முறை கோப்பையை வென்று மீண்டும் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு பெருமிதம் சேர்க்க வேண்டும் என்று பல திட்டங்களை பிசிசிஐ செயல்படுத்தி வருகிறது.

இதனால் உலகக் கோப்பை தொடருக்கு முன்பு பல இருதரப்பு போட்டிகளில் பங்கேற்று வரும் இந்திய அணி பல இளம் வீரர்களுக்கும் வாய்ப்பு கொடுத்து சரியான உலகக்கோப்பை தொடருக்காண அணியை தேர்ந்தெடுப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. இதன் காரணமாக முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் இருதரப்பு தொடர்களில் பங்கேற்ற விளையாட்டு வரும் இளம் வீரர்களுக்கு தங்களுடைய அறிவுரைகளை கொடுத்து வருகின்றனர். 

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர்., நீண்ட காலமாக இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் தடுமாறி வரும் இளம் வீரர் சஞ்சு சாம்சன் தற்பொழுது நடைபெற்று வரும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே உலகக்கோப்பை தொடரில் வாய்ப்பு கிடைக்கும் என அறிவுரை கொடுத்துள்ளார்.

இது குறித்து பேசிய வாசிம் ஜாஃபர்,“உலகக்கோப்பை தொடரில் கேஎல் ராகுல் முழு உடற்தகுதியுடன் இருந்தால் அவரே விளையாடுவதற்கு முதன்மை தேர்வாக இருப்பார். இதற்கு அடுத்ததாக சஞ்சு சாம்சன் அணியில் இருக்க வேண்டும். ஒருவேளை இஷான் கிஷன் அணியின் பேக்கப் விக்கெட்கீப்பர் பேட்ஸ்மேனாக தேர்ந்தெடுக்கப்பட்டால் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு மறுக்கப்படலாம்.

எனவே வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெறும் இந்த ஒரு நாள் தொடர் சாம்சனுக்கு மிகவும் முக்கியமானது. தற்போதைய நிலையில் சந்து சாம்சனிடம் சில சருக்கல்கள் உள்ளது, ஆனால் அவர் பொறுப்பை உணர்ந்து சிறப்பாக செயல்பட்டால் நிச்சயம் உலகக்கோப்பை தொடருக்கான இரண்டாவது விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக தேர்வு செய்யப்படலாம்” என தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை