நான் எதிர்கொண்டதில் இவர்கள் தான் மிகவும் கடினமான பந்துவீச்சாளர்கள் - வாசிம் ஜாஃபர்!

Updated: Sun, Aug 11 2024 21:07 IST
Image Source: Google

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர். இவர் இந்திய அணிக்காக 2000ஆம் ஆண்டு அறிமுகமாகி, 31 டெஸ்ட் போட்டிகளிலும் 2 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். அதில் இவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 5 சதங்கள் மற்றும் 11 அரைசதங்கள் என மொத்தமாக 1,944 ரன்களைச் சேர்த்திருந்தாலும், இந்திய அணிக்காக் 2 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி அதில் 10 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். 

இவரது சர்வதேச ஸ்கோரானது சற்று ஏமாற்றமளிக்கும் வகையில் இருந்தாலும், உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் இவர் பல சாதனைகளை குவித்து ஆச்சரியப்படுத்தியுள்ளார். அந்தவகையில் 260 முதல் தர போட்டிகளில் 421 இன்னிங்ஸ்களில் விளையாடியதுடன் அதில் 57 சதங்களையும், 91 அரைசதங்களையும் விளாசியது 19,410 ரன்களை குவித்துள்ளார். உள்ளூர் போட்டிகளில் இவரது சராசரியானது 50.67 ரன்களாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

அதன்பின் 2020ஆம் ஆண்டு அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வை அறிவித்த வாசிம் ஜாஃபர், தனது ஓய்வுக்கு பிறகு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராகவும், வங்கதேச அண்டர் 19 அணியின் பேட்டிங் பயிற்சியாளராகவும், உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் உத்ரகாண்ட் மற்றும் ஒடிசா அணிகளின் தலைமை பயிற்சியாளராகவும் செயல்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

இந்நிலையில் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் ரசிகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு வாசிம் ஜாஃபர் பதிலளித்துள்ளார். அப்போது அவர் சர்வதேச கிரிக்கெட்டில் தான் எதிர்கொண்ட சிறந்த வேகப்பந்து வீச்சாளர் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் யார் என்பது குறித்து கூறியுள்ளார். அதன்படி, “தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் மற்றும் முன்னாள் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே ஆகியோர் தான் விளையாடிய இரண்டு சிறந்த பந்துவீச்சாளர்கள்” என்று தெரிவித்துள்ளார்.

 

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

மேற்கொண்டு எதிர்வரும் பார்டர் கவாஸ்கர் கோப்பை குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள வாசிம் ஜாஃபர், "பும்ரா, ஷமி மற்றும் சிராஜ் ஆகியோர் உடற்தகுதியுடன் இருந்து பெரும்பாலான போட்டிகளில் விளையாட முடிந்தால், இந்தியாவுக்கு ஹாட்ரிக் வெற்றிபெறுவதற்கான சிறந்த வாய்ப்பு உள்ளது. மேற்கொண்டு அவர்களுடன் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் இடம்பிடிக்கவும் வாய்ப்பு இருக்கிறது. மேலும் மயங்க் யாதவ் உடற்தகுதியுடன் இருக்கும் பட்சத்தில் அவர் நிச்சயம் ஆட்டத்தை மாற்றக்கூடிய வீரராக இருப்பார்” என்றும் தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை