IND vs NZ, 2nd Test: வாசிம் ஜாஃபர் தேர்வு செய்த இந்திய பிளேயிங் லெவன்!
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் நியூசிலாந்து அணி தற்போது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இதில் கான்பூரில் நடைபெற்ற இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி முடிவில்லாமல் டிராவில் முடிந்தது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 3ஆம் தேதி மும்பையில் தொடங்கவுள்ளது.
இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றன. மேலும் இப்போட்டிக்கான இந்திய அணியில் கேப்டன் விராட் கோலி மீண்டும் இணைகிறார். இதனால் அணியின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இண்டாவது டெஸ்ட் போட்டிக்கான தனது இந்திய அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார்.
அவரது தேர்வில் வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மாவுக்கு பதிலாக முகமது சிராஜை தேர்வு செய்துள்ளார். மேலும் ரஹானே, புஜாரா ஆகியோரை இந்திய அணியில் தேர்வு செய்ய வேண்டும்.
மாற்றாக தொடக்க வீரர் மயாங்க் அகர்வாலுக்கு பதிலாக விருத்திமான் சஹாவை தொடக்க வீரராக களமிறக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
வாசிம் ஜாஃபர் பிளேயிங் லெவன்: சுப்மன் கில், மயங்க் அகர்வால், சட்டேஸ்வர் புஜாரா, விராட் கோலி (கே), அஜிங்கியா ரஹானே, ஸ்ரேயாஸ் ஐயர், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், அக்சர் படேல், முகமது சிராஜ், உமேஷ் யாதவ்.