ஐபிஎல் 2023: ரகுலின் விக்கெட்டை வீழ்த்திய ரபாடா!

Updated: Fri, Apr 28 2023 20:48 IST
Image Source: Google

ஐபிஎல் 16ஆவது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இன்றைய போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த சீசனில் இதுவரை ஆடிய தலா  7 போட்டிகளில் 4 வெற்றிகளை பெற்றுள்ள பஞ்சாப் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன.

மொஹாலியில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷிகர் தவான் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். தோள்பட்டை வலி காரணமாக கடந்த சில போட்டிகளில் விளையாடாத ஷிகர் தவான் இந்த போட்டியில் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். 

அதன்படி களமிறங்கிய லக்னோ அணிக்கு கேப்டன் கேஎல் ராகுல் - கைல் மேயர்ஸ் இணை தொடக்க வீரர்களாக களமிறங்கினர். தொடக்கத்தில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த இணை, இரண்டாவது ஓவர்முதல் அதிரடி காட்டத் தொடங்கியது. 

VIDEO: ரகுலின் விக்கெட்டை வீழ்த்திய ரபாடா

இப்போட்டியில் பெரிய இன்னிங்ஸ் ஆடுவர் என எதிர்பார்க்கப்பட்ட கேஎல் ராகுல் 9 பந்துகளில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி என 11 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் காகிசோ ரபாடா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை