தீக்ஷனா ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசிய ரஸல் - காணொளி!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடான் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் அணி முதலில் பேட்டிங் செய்தவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய கேகேஆர் அணியில் சுனில் நரைன் 11 ரன்களுக்கும், ரஹ்மனுல்லா குர்பாஸ் 35 ரன்களுக்கும், அஜிங்கியா ரஹானே 30 ரன்களுக்கும், அங்கிரிஷ் ரகுவன்ஷி 44 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர். இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஆண்ட்ரே ரஸல் 4 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள் என 57 ரன்களையும், அவருடன் இணைந்து விளையாடி வந்த ரிங்கு சிங் ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 19 ரன்களையும் சேர்த்து அணிக்கு தேவையானா ஃபினிஷிங்கைக் கொடுத்தார்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 206 ரன்களைச் சேர்த்தது. ராஜஸ்தான் அணி தரப்பில் மஹீஷ் தீக்ஷனா, ரியான் பராக் மற்றும் ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றி அசத்தினர். இதனையடுத்து கடின இலக்கை நோக்கி விளையாடி வரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தொடக்கத்திலேயே 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
இந்நிலையில் இப்போட்டியில் சிக்ஸர் மழை பொழிந்த ஆண்ட்ரே ரஸல் நடப்பு ஐபிஎல் தொடரில் தனது முதல் அரைசதத்தை பூர்த்தி செய்து அசத்தினார். அதிலும் குறிப்பாக அவர் மஹீஷ் தீக்ஷனாவின் ஒரே ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்களை பறக்கவிட்டு மிரட்டினார். அதன்படி இன்னிங்ஸின் 18ஆவது ஓவரை மஹீஷ் தீக்ஷனா வீசிய நிலையில் ஓவரின் 4ஆவது பந்தை எதிர்கொண்ட ரஸல் லாங் ஆன் திசையில் இமாலய சிக்ஸரை பறக்கவிட்டார்.
அதன்பின் அடுத்த பந்தை மீண்டும் லாங் ஆன் திசையில் சிக்ஸருக்கு பறக்கவிட்ட ரஸல், கடைசி பந்தை லாங் ஆஃப் திசையில் சிக்ஸரை விளாசி ஓவரை முடித்து வைத்தார். இதன்மூலம் அந்த ஓவரில் மட்டும் கேகேஆர் அணி மொத்தமாக 23 ரன்களைச் சேர்த்து அசத்தியது. இந்நிலையில் மஹீஷ் தீக்ஷனா ஓவரில் ஆண்ட்ரே ரஸல் ஹாட்ரிக் சிக்சர்களை விளாசிய காணொளியானது இணையாத்தில் வைரலாகி வருகிறது.
ராஜஸ்தான் ராயல்ஸ் பிளேயிங் லெவன்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், வைபவ் சூர்யவன்ஷி, ரியான் பராக்(கேப்டன்), குணால் சிங் ரத்தோர், துருவ் ஜூரல், ஷிம்ரான் ஹெட்மையர், வனிந்து ஹசரங்கா, ஜோஃப்ரா ஆர்ச்சர், மஹீஷ் தீக்ஷனா, யுத்வீர் சிங் சரக், ஆகாஷ் மத்வால்
இம்பாக்ட் வீரர்கள்: குமார் கார்த்திகேயா, ஷுபம் துபே, துஷார் தேஷ்பாண்டே, குவேனா மபாகா, அசோக் ஷர்மா
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பிளேயிங் லெவன்: ரஹ்மானுல்லா குர்பாஸ், சுனில் நரைன், அஜிங்க்யா ரஹானே(கேப்டன்), ஆங்கிரிஷ் ரகுவன்ஷி, மொயீன் அலி, வெங்கடேஷ் ஐயர், ரின்கு சிங், ஆண்ட்ரே ரஸ்ஸல், ராமன்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, வைபவ் அரோரா
Also Read: LIVE Cricket Score
இம்பேக்ட் வீரர்கள்: மணீஷ் பாண்டே, ஹர்ஷித் ராணா, அனுகுல் ராய், ரோவ்மேன் பவல், லுவ்னித் சிசோடியா