இமாம் உல் ஹக்கை ரன் அவுட் செய்த அக்ஸர் பாடேல் - காணொளி!
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து இந்திய அணியை பந்துவீச அழைத்தது. இப்போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் இமாம் உல் ஹக் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு இமாம் உல் ஹக் மற்றும் பாபர் ஆசா ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
இதில் இருவரும் தொடக்கம் முதலே நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் சிறப்பான தொடக்கத்தைப் பெற்றிருந்த நட்சத்திர வீரர் பாபர் ஆசாம் 5 பவுண்டரிகளுடன் 23 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சில் த்னது விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து மாற்றொரு தொடக்க வீரரான இமாம் உல் ஹக்கும் 10 ரன்களை மட்டுமே சேர்த்த நிலையில் ரன் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார்.
அதன்படி இன்னிங்ஸின் 10ஆவது ஓவரை குல்தீப் யாதவ் வீசிய நிலையில் அந்த ஓவரின் இரண்டாவது பந்தை எதிர்கொண்ட இமாம் உல் ஹக் மிட் விக்கெட் திசையில் அடித்துவிட்டு, சிங்கிள் எடுக்க முயற்சியில் ஓடினார். அப்போது அத்திசையில் ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த அக்ஸர் படேல் பந்தை பிடித்த் கையோடு உடனடியாக ஸ்டம்பை நோக்கி அபாராமன் த்ரோவை அடித்ததுடம் இமாம் உல் ஹக்கின் விக்கெட்டையும் வீழ்த்தினார்.
இந்நிலையில் அக்ஸர் படேல் செய்த இந்த அபாரமான ரன் அவுட் குறித்த காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்பின் ஜோடி சேர்ந்துள்ள பாகிஸ்தான் அணியின் கேப்டன் முகமது ரிஸ்வான் மற்றும் சௌத் ஷகீல் இணையும் நிதானமாக விளையாடி அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தியதுடன், ஸ்கோரையும் சீரான வேகத்தில் உயர்த்தி வருவது குறிப்பிடத்தக்கது.
Pakistan Playing XI: இமாம் உல் ஹக், பாபர் ஆசாம், சௌத் ஷகீல், முகமது ரிஸ்வான் (கேப்டன்), ஆகா சல்மான், தையாப் தாஹிர், குஷ்தில் ஷா, ஷாஹீன் ஷா அஃப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ரவூஃப், அப்ரார் அகமது.
Also Read: Funding To Save Test Cricket
India Playing XI: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், அக்ஸர் படேல், ஹார்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, முகமது ஷமி.