ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற 10ஆவது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் ஓமன் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பார்படாஸில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஓமன் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் டிராவிஸ் ஹெட் 12 ரன்களிலும், கேப்டன் மிட்செல் மார்ஷ் 14 ரன்களிலும், கிளென் மேக்ஸ்வெல் ரன்கள் ஏதுமின்றியும் விக்கெட்டுகளை இழந்தனர். 

Advertisement

பின்னர் இணைந்த டேவிட் வார்னர் - மார்கஸ் ஸ்டொய்னிஸ் இணை அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் 4ஆவது விக்கெட்டிற்கு 102 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். இதில் அதிரடியாக விளையாடிய மார்கஸ் ஸ்டொய்னிஸ் 27 பந்துகளிலும், டேவிட் வார்னர் 46 பந்துகளிலும் தங்களது அரைசதங்களைப் பதிவுசெய்தனர். அதன்பின் 6 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 56 ரன்களைச் சேர்த்திருந்த டேவிட் வார்னர் ஆட்டமிழந்தார். 

Advertisement

இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மார்கஸ் ஸ்டொய்னிஸ் 2 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் என 67 ரன்களை விளாசினார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணியானது 4 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்களைக் குவித்தது. ஓமன் அணி தரப்பில் மெஹ்ரான் கான் 2 விக்கெட்டுகளையும், பிலால் கான், கலீலுல்லா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றி அசத்தினர்.

இதனையடுத்து ஓமன் அணி இலக்கை நோக்கி விளையாடி வருகிறது. இந்நிலையில் இப்போட்டியில் ஓமன் அணி வீரர் அகிப் இலியாஸ் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் மிகச்சிறந்த கேட்சைப் பிடித்து ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். அதன்படி இன்னிங்ஸின் 9ஆவது ஓவரை ஓமன் அணி தரப்பில் மெஹ்ரான் கான் வீச, அந்த ஓவரில் 3ஆது பந்தை கிளென் மேக்ஸ்வெல் கவர் திசையில் அடிக்க முயற்சித்தார். 

 

ஆனால் பந்து அவர் நினைத்ததைவிட நின்று வர, மேக்வெல்லும் தனது ஷாட்டை விளையாடினார். அப்போது அத்திசையில் ஃபீல்டிங் செய்துகொண்டிருந்த அகிப் இலியாஸ் அபாரமான டைவை அடித்து கேட்ச் பிடித்தும் அசத்தியதுடன், ரசிகர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். இந்நிலையில் அகிப் இலியாஸ் பிடித்த அபாரமான கேட்ச் குறித்த காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News