ENG vs IND, 1st ODI: பும்ரா, ஷமி அபாரம்; திணறும் இங்கிலாந்து!
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி லண்டனில் உள்ள கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிரது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. மேலும் காயம் காரணமாக இப்போட்டியில் விராட் கோலி விளையாடவில்லை.
அதன்படி முதலில் பேட்டிங்கை ஆரம்பித்த முதலே தடுமாறி வருகிறது.தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஜேசன் ராய் மற்றும் ஜானி பேர்ஸ்டோவ் ஜோடி ஜஸ்பிரித் பும்ரா பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர். இதில் ஜேசன் ராய் ரன் ஏதும் எடுக்காமலும், ஜானி பேர்ஸ்டோவ் 7 ரன்களுக்கும் ஆட்டமிழந்தார்.
இவரை தொடர்ந்து களமிறங்கிய ஜோ ரூட்(0) பும்ராவிடம் பந்துவீச்சில் டக் அவுட் ஆகினார். அடுத்ததாக முகமது ஷமியிடம் பென் ஸ்டோக்ஸ் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து களமிரங்கிய லியாம் லிவிங்ஸ்டோன் 8 பந்துகளை சந்தித்த நிலையில் பும்ரா வீசிய பந்தில் ரன் ஏதும் எடுக்காமல் கிளீன் போல்ட் ஆகினார். அதன்பின் ஜோடி சேர்ந்த கேப்டன் பட்லர் - மொயீன் அலி இணை பொறுமையாக விளையாடி விக்கெட் இழப்பை சிறுதிநேரம் தடுத்தனர்.
ஆனால் இந்த கூட்டனியாலும் அதிக நேரம் தாக்குப்பிடிக்க முடியவில்லை. பிரஷித் கிருஷ்ணா வீசிய 14ஆவது ஓவரில் 14 ரன்களை எடுத்திருந்த மொயின் அலி விக்கெட்டை இழந்தார்.
இதனால் தற்போதுவரை இங்கிலாந்து அணி 14 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 59 ரன்களை எடுத்துள்ளது. அதன்பின் கேப்டன் பட்லர் ஓரளவு பொறுப்புடன் விளையாடி அணியை மீட்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரும் 30 ரன்களோடு பெவிலியனுக்கு திரும்பினார்.