அடுத்தடுத்து சிக்ஸர்களை விளாசிய கார்பின் போஷ்- காணொளி!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறித்தது.
அதன்படி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியில் அதிகபட்சமாக வில் ஜேக்ஸ் அரைசதம் கடந்துடன் 53 ரன்களையும், சூர்யகுமார் யாதவ் 35 ரன்களையும், இறுதியில் கார்பின் போஷ் அதிரடியாக விளையாடி 27 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதன் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்களைச் சேர்த்துள்ளது. குஜராத் டைட்டன்ஸ் அணி தரப்பில் சாய் கிஷோர் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதனையடுத்து குஜராத் டைட்டன்ஸ் அணி இலக்கை நோக்கி விளையாடி வருகிறது. இந்நிலையில் இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய கார்பின் போஷ் கடைசி ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்களை விளாசி அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தார். ஏனெனில் இப்போட்டியில் மும்பை அணியானது அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததன் காரணமாக 140 ரன்களை எடுக்குமா என்ற சந்தேகம் இருந்தது.
அச்சமயத்தில் இன்னிங்ஸின் கடைசி ஓவரை பிரஷித் கிருஷ்ணா வீசிய நிலையில் முதல் பந்தை எதிர்கொண்ட கார்பின் போஷ் மிட் விக்கெட் திசையில் சிக்ஸர் அடித்து அசத்தினார். மேற்கொண்டு இரண்டாவது பந்தையும் எதிர்கொண்ட ரிவர்ஸ் ஸ்வீப் மூலமாக மற்றொரு சிக்ஸரையும் அடித்து அணியை 150 ரன்கள் எட்ட உதவினார். பின்னர் பவுன்சராக வந்த மூன்றாவது பந்தை கணிக்க தவறியதுடன் தலை பகுதியில் பலமான அடியையும் வாங்கினார்.
அதன்பின் அடுத்த பந்தில் இரண்டு ரன்களை எடுக்கும் முயற்சியில் கார்பின் போஷ் விக்கெட்டை இழந்தார். இதனையடுத்து அவர் இரண்டாவது இன்னிங்ஸின் ஃபீல்டிங் செய்யவும் வரவில்லை. இதன் காரணமாக கன்கஷன் சப்டியூட்டாக அஷ்வினி குமார் களமிறங்கியுள்ளார். இந்நிலையில் கார்பின் போஷ் அடுத்தடுத்து சிக்ஸர்களை விளாசிய காணொளியானது தற்சமயம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மும்பை இந்தியன்ஸ் பிளேயிங் லெவன்: ரியான் ரிக்கல்டன் (விக்கெட் கீப்பர்), ரோஹித் சர்மா, வில் ஜாக்ஸ், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா (கேப்டன்), நமன் தீர், கார்பின் போஷ், தீபக் சாஹர், டிரென்ட் போல்ட், ஜஸ்பிரித் பும்ரா
இம்பேக்ட் வீரர்கள்: கர்ண் ஷர்மா, ராஜ் பாவா, ராபின் மின்ஜ், ரீஸ் டாப்லி, அஷ்வனி குமார்
குஜராத் டைட்டன்ஸ் பிளேயிங் லெவன்: சாய் சுதர்ஷன், ஷுப்மான் கில் (கேட்ச்), ஜோஸ் பட்லர் (வி.கே), ராகுல் தெவாடியா, ஷாருக் கான், ரஷித் கான், ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், அர்ஷத் கான், ஜெரால்ட் கோட்ஸி, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா
Also Read: LIVE Cricket Score
இம்பேக்ட் வீரர்கள்: ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட், மஹிபால் லாம்ரோர், அனுஜ் ராவத், தசுன் ஷனகா, வாஷிங்டன் சுந்தர்