ஆஷஸ் தொடருக்கான இங்கிலாந்து மகளிர் அணி அறிவிப்பு!

Updated: Fri, Dec 17 2021 22:20 IST
WATCH: Cricket England Announce Squad For Women's Ashes; Heather Knight Named Captain (Image Source: Google)

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான பாரம்பரியமிக்க ஆஷஸ் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அதனைத் தொடர்ந்து தற்போது இரு நாட்டு மகளிர் அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் தொடர் வரும் ஜனவரி 27ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. 

மேலும் இதில் இரு அணிகளும் ஒரு டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. 

இந்நிலையில் இத்தொடருக்கான இங்கிலாந்து மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஹீதர் நைட் தலைமையிலான இங்கிலனது மகளிர் அணியில் அறிமுக வீராங்கனைகளுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து மகளிர் அணி: ஹீதர் நைட் (கே), டாமி பியூமண்ட், மியா பூச்சியர், கேத்ரின் ப்ரண்ட், கேட் கிராஸ், ஃப்ரேயா டேவிஸ், சார்லி டீன், சோபியா டங்க்லி, சோஃபி எக்லெஸ்டோன், டாஷ் ஃபரன்ட், சாரா க்ளென், ஏமி ஜோன்ஸ், நாட் ஸ்கைவர், அன்யா ஷ்ரப்சோல், மேடி வில்லியர்ஸ், ராலன் வின்ஃபீல்ட் ஹில், டேனி வியாட்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை