அடுத்தடுத்து இமால சிக்ஸர்களை பறக்கவிட்ட டெவால்ட் பிரீவிஸ் - காணொளி
Dewald Brevis Six: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்காவின் இளம் அதிரடி நட்சத்திர வீரர் டெவால்ட் பிரீவிஸ் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அரைசதம் கடந்தும் அசத்தினார்.
ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று கெய்ர்ன்ஸில் நடைபெற்றது. இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணியில் டெவால்ட் பிரீவிஸ் அரைசதம் கடந்ததுடன் 26 பந்துகளில் ஒரு பவுண்டரி, 6 சிக்ஸர்கள் என 53 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். இதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்களைச் சேர்த்தது.
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் மிட்செல் மார்ஷ் 54 ரன்களை எடுத்து ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்கள் சோபிக்க தவறினர். இருப்பினும் மறுபக்கம் அபாரமாக விளையாடி வந்த கிளென் மேக்ஸ்வெல் தனது அரைசதத்தைப் பதிவுசெய்ததுடன், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 8 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 62 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார்.
இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 19.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 2 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி ஆஸ்திரேலிய அணி அசத்தியுள்ளது. இப்போட்டியில் அரைசதம் கடந்து அசத்திய கிளென் மேக்ஸ்வெல் ஆட்டநாயகன் விருதையும், டிம் டேவிட் தொடர் நாயகன் விருதையும் வென்றனர்.
இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி தோல்வியைத் தழுவினாலும், இளம் வீரர் டெவால்ட் பிரீவிஸ் அரைசதம் கடந்து அசத்தினார். அதிலும் குறிப்பாக அவர் மொத்தமாக 6 சிக்ஸர்களையும் விளாசி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார். மேலும் அவர் விளாசிய 6 சிக்ஸர்களில் மூன்று சிக்ஸர்கள் 100 மீட்டருக்கு மேல் இருந்தது. அதேசமயம் அவர் விளாசிய ஒரு சிக்ஸர் 120 மீட்டர் தூரம் சென்று மைதானத்திற்கு வெளியே சென்று விழுந்தது.
Also Read: LIVE Cricket Score
இந்த இன்னிங்ஸின் முதல் சிக்ஸரை டெவால்ட் பிரீவிஸ், இடது கை வேகப்பந்து வீச்சாளர் பென் துவார்ஷுயிஸிடம் அடித்தார், அது 100 மீட்டர் தொலைவில் டீப் பேக்வேர்டு ஸ்கொயர் லெக்கில் விழுந்தது. அதன்பின் ஆரோன் ஹார்டின் பந்துவீச்சில் பிரீவிஸ் தொடர்ச்சியா 4 சிக்ஸர்களை விளாசினார். அதுவும் அவரது டிரேட் மார்க் ஷாட்டான நோ-லுக் ஷாட்டில் 3 சிக்ஸர்காளை விளாசி ஆசத்தி இருந்தார். இந்நிலையில் பிரிவீஸ் அதிரடியாக விளையாடிய காணொளி வைரலாகி வருகிறது.