விக்கெட் கீப்பிங் திறமையால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த துருவ் ஜுரெல் - காணொளி

Updated: Fri, Jul 11 2025 12:54 IST
Image Source: Google

Dhruv Jurel Catch: இங்கிலாந்துக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தற்காலிக விக்கெட் கீப்பராக செயல்பட்டு வரும் துருவ் ஜூரெல் தனது விக்கெட் கீப்பர் திறமையால் ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்று வருகிறார்.

லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து வரும் இங்கிலாந்து அணியானது முதல்நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 251 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் ஜோ ரூட் 99 ரன்களுடனும், பென் ஸ்டோக்ஸ் 39 ரன்களுடனும் இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளனர். 

இந்நிலையில் இப்போட்டியில் இந்திய அணி விக்கெட் கீப்பர் துருவ் ஜூரெல் பிடித்த கேட்ச் ஒன்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. அதன்படி இப்போட்டியின் முதல்நாள் தேநீர் இடைவேளைக்கு பிறகான மூன்றாவது செஷனின் முதல் ஓவரை ரவீந்திர ஜடேஜா வீசினார். அப்போது அந்த ஓவரின் முதல் பந்திலேயே 44 ரன்களைச் சேர்த்திருந்த ஒல்லி போப் விக்கெட் கீப்பர் துருவ் ஜூரெலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்ததுடன் அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 

அதிலும் குறிப்பாக அந்த பந்து ஒல்லி போப்பின் பேட்டில் எட்ஜாகி வெளியே சென்ற நிலையிலும், அதனை சரியாக கணித்த துருவு ஜூரெல் அபாரமான கேட்ச்சை பிடித்தார். இந்நிலையில் துருவு ஜூரெலின் இந்த கேட்ச் குறித்த காணொளியானது வைரலாகி வருகிறது. முன்னதாக இப்போட்டியில் இந்திய அணி விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் காயத்தை சந்தித்து மைதானத்தில் இருந்து வெளியேறிய நிலையில், துருவ் ஜூரெல் மாற்று விக்கெட் கீப்பராக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இங்கிலாந்து பிளேயிங் லெவன்: பென் டக்கெட், ஜாக் கிரௌலி, ஒல்லி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ்(கேப்டன்), ஜேமி ஸ்மித், கிறிஸ் வோக்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், பிரைடன் கார்ஸ், ஷோயப் பசீர். 

Also Read: LIVE Cricket Score

இந்திய பிளேயிங் லெவன்: கேஎல் ராகுல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், கருண் நாயர், ஷுப்மான் கில் (கேப்டன்), ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா, ஆகாஷ் தீப், முகமது சிராஜ்.    

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை