துருவ் ஜுரெலின் சிறப்பான கேட்ச்சின் மூலம் விக்கெட்டை இழந்த ரிஷப் பந்த்; காணொளி!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் ராஜஸ்தான் ரயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இன்றைய போட்டிக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் கேப்டன் சஞ்சு சாம்சன் காயம் காரணமாக விளையாடாததை அடுத்து ரியான் பாராக் கேப்டனாக செயல்படுகிறார். மேற்கொண்டு இளம் அறிமுக வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு இப்போட்டியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் மிக இளம் வயதில் லெவனில் இடம்பிடித்த வீரர் எனும் தனித்துவ சாதனையையும் அவர் படைத்துள்ளார்.
இதையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் அதிரடி தொடக்க வீரர் மிட்செல் மார்ஷ் 4 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய நிக்கோலஸ் பூரனும் 11 ரன்களுடன் நடையைக் கட்டினார். அவர்களைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ரிஷப் பந்தும் 3 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார். பின்னர் இணைந்துள்ள ஐடன் மார்க்ரம் மற்றும் ஆயூஷ் பதோனி இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இப்போட்டியில் ரிஷப் பந்து விக்கெட்டை இழந்த காணொளி வைரலாகி வருகிறது. அதன்படி இன்னிங்ஸின் 8ஆவது ஓவரை வநிந்து ஹசரங்கா வீசிய நிலையில் ஓவரின் 4ஆவது பந்தை எதிர்கொண்ட ரிஷப் பந்த ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட் மூலம் பவுண்டரி அடிக்க நினைத்து விளையாடினார். ஆனால் பந்து அவர் நினைத்ததை விட வேகமாக வந்ததன் காரணமாக அவரால் பந்தை அடிக்க முடியாமல் அது பேட்டில் எட்ஜாகியது.
பின்னர் அந்த பந்து நேரடியாக விக்கெட் கீப்பர் துருவ் ஜூரெலில் ஹெல்மட்டில் பட்ட கீழே விழ இருந்த நிலையில், ஜூரெல் திறம்பட செயல்பட்டு அந்த பந்தை கேட்ச் பிடித்து அசத்தினார். இதனால் இன்றைய ஆட்டத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பந்த் 9 பந்துகளில் 3 ரன்களை மட்டுமே எடுத்த கையோடு பெவிலியன் திரும்பினார். இந்நிலையில் தான் ரிஷப் பந்த் ஆட்டமிழந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் பிளேயிங் லெவன்: ஐடன் மார்க்ரம், மிட்செல் மார்ஷ், நிக்கோலஸ் பூரன், ரிஷப் பந்த் (கேப்டன்), டேவிட் மில்லர், அப்துல் சமத், ரவி பிஷ்னோய், ஷர்துல் தாக்கூர், பிரின்ஸ் யாதவ், திக்வேஷ் சிங் ரதி, அவேஷ் கான்
இம்பாக்ட் வீரர்கள்: ஆயுஷ் படோனி, மயங்க் யாதவ், ஷாபாஸ் அகமது, மேத்யூ பிரீட்ஸ்கே, ஹிம்மத் சிங்
ராஜஸ்தான் ராயல்ஸ் பிளேயிங் லெவன்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுபம் துபே, ரியான் பராக்(கேப்டன்), நிதிஷ் ராணா, துருவ் ஜூரல்(டபிள்யூ), ஷிம்ரோன் ஹெட்மியர், வனிந்து ஹசரங்கா, ஜோஃப்ரா ஆர்ச்சர், மஹீஷ் தீக்ஷனா, சந்தீப் சர்மா, துஷார் தேஷ்பாண்டே
Also Read: Funding To Save Test Cricket
இம்பாக்ட் வீரர்கள்: வைபவ் சூர்யவன்ஷி, யுத்வீர் சிங் சரக், ஆகாஷ் மத்வால், குமார் கார்த்திகேயா, குணால் சிங் ரத்தோர்