ஐபிஎல் 2024: ரஷித் சுழலில் சிக்கிய ரச்சின்; சஹா அபார ஸ்டம்பிங் - வைரல் காணொளி!

Updated: Tue, Mar 26 2024 20:30 IST
ஐபிஎல் 2024: ரஷித் சுழலில் சிக்கிய ரச்சின்; சஹா அபார ஸ்டம்பிங் - வைரல் காணொளி! (Image Source: Google)

இந்தியாவில் தொடங்கி நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது. இதில் இன்று நடைபெற்றுவரும் 7ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. சேப்பாக்கத்தில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டன் ஷுப்மன் கில் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். 

இதனையடுத்து களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் - ரச்சின் ரவீந்திரா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் முதல் இரண்டு ஓவர்களில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி மைதானத்தின் தன்மையைச் சோதித்தனர். அதன்பின் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த தொடங்கிய ரச்சின் ரவீந்திரா பவுண்டரியும் சிக்சர்களுமாக விளாசித்தள்ளினார். 

அவருக்கு துணையாக கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டும் ஸ்டிரைக்கை ரொட்டேட் செய்ய ரச்சின் ரவீந்திராவும் தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதன்மூலம் முதல் 5 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விக்கெட் இழப்பின்றி 58 ரன்களைக் குவித்தார். அதன்பின் பவர்பிளேவின் கடைசி ஓவரை வீச குஜராத் அணியின் நட்சத்திர வீரர் ரஷித் கான் வந்தார். 

 

அவரது ஓவரின் முதல் பந்திலேயே பவுண்டரி விளாசிய ரச்சின் ரவீந்திரா தனது முதல் அரைசதத்தை அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இரண்டாவது பந்தை கணிக்கத் தவறினார். இதனால் ரச்சின் ரவீந்திர பந்தை தவறவிட, அதனை சூதாரித்துக்கொண்ட விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா அபாரமான ஸ்டம்பிங்கை செய்த்து ரச்சின் ரவீந்திரா விக்கெட்டை கைப்பற்றினார். 

இதனால் இப்போட்டியில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரச்சின் ரவீந்திரா 20 பந்துகளில் 6 பவுண்டரி, 3 சிக்சர்களை விளாசி 46 ரன்களுடன் பெவிலியனுக்கு திரும்பினார். இந்நிலையில் விருத்திமான் சஹா அபாரமாக கீப்பிங் செய்ததுடன் ரச்சின் ரவீந்திரா விக்கெட்டையும் கைப்பற்றிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை