ஐபிஎல் 2022: ஜோஷ் பட்லரை வெளியேற்றிய ஃபர்குசனின் யார்க்கர்!

Updated: Thu, Apr 14 2022 23:00 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்றுவரும் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்திவருகின்றன. 

இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச தீர்மானித்து. அதன்படி களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்களைச் சேர்தது. 

இதில் அதிகபட்சமாக கேப்டன் ஹர்திக் பாண்டியா இறுதிவரை ஆட்டமிழக்காமல் 87 ரன்களைக் குவித்தார்.

இதையடுத்து கடின இலக்கை துரத்திய ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார்.

 

அதன்பின் லோக்கி ஃபர்குசன் வீசிய 5ஆவது ஓவரின் 5ஆவது பந்தை சிக்சருக்கு விளாசிய பட்லர் தனது அரைசதத்தையும் பதிவுசெய்தார்.

 

ஆனால் அதன்பின் ஓவரின் கடைசி பந்தை ஸ்லோ யார்க்கராக வீசிய ஃபர்குசன், ஜோஸ் பட்லரை க்ளீன் போல்டாக்கி கம்பேக் கொடுத்தார். பட்லரின் விக்கெட்டை வீழ்த்திய ஃபர்குசனின் யார்க்கர் காணொளி இண்ணையத்தில் வைரலாகி வருகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை