பவுண்டரி எல்லையில் அசாத்தியமான கேட்சை பிடித்து ஃபிரேசர் மெக்குர்; வைரலாகும் காணொளி!

Updated: Sun, Mar 30 2025 20:16 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. 

இந்நிலையில் இப்போட்டியில் டேல்லி கேப்பிட்டல்ஸ் அணி வீரர் ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் பவுண்டரில் எல்லையில் ஒரு அபாரமான கேட்ச்சை பிடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். அதன்படி இன்னிங்ஸின் 16ஆவது ஓவரை குல்தீப் யாதவ் வீசிய நிலையில், அந்த ஓவரின் ஐந்தாவது பந்தை எதிர்கொண்ட அனிகேத் வர்மா சிக்ஸர் அடிக்கும் முயற்சியில் மிட் விக்கெட் திசையில் அசத்தலான ஒரு ஷாட்டை விளையாடினார். 

மேலும் அவர் அந்த ஷாட்டை சிறப்பாக விளையாடியதன் காரணமாக பந்து சிக்ஸருக்கு சென்றது என அனைவரும் நினைத்தனர். ஆனால் அத்திசையில் ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் யாரும் எதிர்பாராத வகையில் பவுண்டரில் எல்லை அருகே தாவி பந்தை பிடித்து அசத்தினார். இதனால் அதிரடியாக விளையாடி வந்த அனிகேத் சர்மா 74 ரன்களில் தனது விக்கெட்டை இழந்து ஏமாற்றத்துடன் பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். 

மெக்குர்க்கின் இந்த அற்புதமாக கேட்ச்சை, வர்ணனையாளர்கள் புகழ்ந்து தள்ளினர். அதே நேரத்தில் மைதானத்தில் இருந்த சில ரசிகர்கள் வாயடைத்துப் போனார்கள். இந்த கேட்சை ரசிகர்கள் சமூக ஊடகங்களிலும் அதிகம் ரசித்து வருகின்றனர், இதன் காரணமாக ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் பிடித்த இந்த கேட்ச் குறித்த காணொளியும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தப் போட்டியைப் பற்றிப் பேசினால், முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 18.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 163 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக அனிகேத் வர்மா 74 ரன்களையும், ஹென்ரிச் கிளாசென் 32 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறவினர். டெல்லி கேப்பிட்டல்ஸ் தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். 

Also Read: Funding To Save Test Cricket

அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியானது ஃபாஃப் டூ பிளெசிஸின் அதிரடியான ஆட்டத்தின் காரணமாக 16 ஓவர்களிலேயே இலக்கை எட்டி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இதில் அதிகபட்சமாக ஃபாஃப் டூ பிளெசிஸ் 50 ரன்களையும், ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் 38 ரன்களையும், அபிஷேக் போரல் 34 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை