வாஷிங்டன் சுந்தரை க்ளீன் போல்டாக்கிய ஜஸ்பிரித் பும்ரா - காணொளி!
ஐபிஎல் தொடரில் நேற்ற்ய் நடைபெற்ற எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முல்லன்பூரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா 9 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 81 ரன்களையும், ஜானி பேர்ஸ்டோவ் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 47 ரன்களையும், சூர்யகுமார் யாதவ் ஒரு பவுண்டரி 3 சிக்ஸர்களுடன் 33 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 228 ரன்களைக் குவித்துள்ளது. குஜராத் தரப்பில் சாய் கிஷோர் மற்றும் பிரஷித் கிருஷ்ணா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
அதன்பின் இலக்கை நோக்கி களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணியில் சாய் சுதர்ஷன் 80 ரன்களையும், வாஷிங்டன் சுந்தர் 48 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 208 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியதுடன் குவாலிஃபையர் சுற்றுக்கும் முன்னேறி அசத்தியுள்ளது.
இந்நிலையில் இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜஸ்பிரித் பும்ரா முக்கியமான தருணத்தில் வாஷிங்டன் சுந்தரின் விக்கெட்டை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். அதன்படி இப்போட்டியின் 14ஆவது ஓவரை ஜஸ்பிரித் பும்ரா வீசிய நிலையில், அந்த ஓவரின் 4ஆவது பந்தை குஜராத் டைட்டன்ஸ் அணியின் வாஷிங்டன் சுந்தர் எதிர்கொண்டார்.
Also Read: LIVE Cricket Score
அப்போது பும்ரா அந்த பந்தை யார்க்கராக வீசிய நிலையில் அதனை தடுத்து விளையாட முயற்சித்த வாஷிங்டன் சுந்தர் முழுமையாக தவறவிட்டதுடன் க்ளீன் போல்டும் ஆனார். இதன் காரணமாக அரைசதத்தை நெருங்கிய வாஷிங்டன் சுந்தர் 48 ரன்களை எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். இந்நிலையில் ஜஸ்பிரித் பும்ரா விக்கெட்டை வீழ்த்திய காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.