ஜோ ரூட்டை க்ளீன் போல்டாக்கிய ஆகாஷ் தீப் - காணொளி
Joe Root Clean Bowled by Akash Deep: இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 608 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடி வரும் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 587 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டான நிலையில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 407 ரன்களை மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதன்மூலம் 180 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி ஷுப்மன் கில்லின் அபாரமான சதத்தின் மூலம் 427 ரன்களை குவித்த நிலையில் டிக்ளர் செய்வதாக அறிவித்து, இங்கிலாந்து அணிக்கு 608 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்துள்ளது. அதன்பின் கடின இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 72 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளது.
இதில் ஒல்லி போப் 24 ரன்களுடனும், ஹாரி புரூக் 15 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இதனையடுத்து இங்கிலாந்து அணி கைவசம் 7 விக்கெட்டுகள் உள்ள நிலையில் 536 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடவுள்ளது. இந்நிலையில் இப்போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்து அணியின் ஜாம்பவான் வீரர் ஜோ ரூட் வெறும் 6 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
அதன்படி இன்னிங்ஸின் 11ஆவது ஓவரை ஆகாஷ் தீப் வீசிய நிலையில் அந்த ஓவரின் இரண்டாவது பந்தை எதிர்கொண்ட ஜோ ரூட் பந்தை தடுத்து விளையாடும் முயற்சியில் தவறவிட்டார். இதனால் அவர் க்ளீன் போல்டாகியதுடன் 6 ரன்களை மட்டுமே எடுத்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். இந்நிலையில் ஆகாஷ் தீப் பந்துவீச்சில் ஜோ ரூட் க்ளீன் போல்டாகிய காணொளியானது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
England Playing XI : ஸாக் கிரௌலி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஹாரி ப்ரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேமி ஸ்மித், கிறிஸ் வோக்ஸ், பிரைடன் கார்ஸ், ஜோஷ் டோங், ஷோயப் பஷீர்.
Also Read: LIVE Cricket Score
India Playing XI : கேஎல் ராகுல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், கருண் நாயர், ஷுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பந்த், நிதீஷ் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ஆகாஷ் தீப், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.