வங்கதேசம் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி தாக்காவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஷேர் பங்களா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய வங்கதேச அணியானாது தொடக்கம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.

Advertisement

இதனால் வங்கதேச அணியானது முதல் இன்னிங்ஸில் 106 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய காகிசோ ரபாடா மற்றும் வியான் முல்டர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.  அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த தென் ஆப்பிரிக்க அணியும் தொடக்கத்திலேயே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இருப்பினும் கைல் வெர்ரைன் சதமடித்து அசத்தியதுடன் 114 ரன்களையும், மறுபக்கம் அரைசதம் கடந்த வியான் முல்டர் 54 ரன்களையும் சேர்த்தனர்.

Advertisement

இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 308 ரன்களைச் சேர்த்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல அவுட்டானது. வங்கதேச தரப்பில் தைஜுல் இஸ்லாம் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் 202 பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த வங்கதேசயில் ஷாத்மான், மொனினும் ஹக், நஜ்முல் ஹொசைன், உள்ளிட்டோர் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதனால் வங்கதேச அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 101 ரன்களை எடுத்தது. இந்நிலையில் இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தை மஹ்முதுல் ஹசன் 38 ரன்களுடனும், முஷ்ஃபிக்கூர் 31 ரன்களுடனும் தொடர்ந்தனர்.

இதில் மஹ்முதுல் ஹசன் ஜாய் 40 ரன்னில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து முஷ்ஃபிக்கூர் ரஹீம் 33 ரன்னில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வய்ப்பினைத் தவறவிட்டனர். இதையடுத்து மெஹிதி ஹசன் மிராஸ் மற்றும் ஜகர் அலி இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இதன்மூலம் வங்கதேச அணி இரண்டாவது இன்னிங்ஸில் முன்னிலையும் பெற்றுள்ளது. இந்நிலையில் இப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் காகிசோ ரபாடா விக்கெட் வீழ்த்திய காணொளி ஒன்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. 

 

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

அந்தவகையில் இன்றைய ஆட்டத்தில் 33 ரன்களைச் சேர்த்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த் முஷ்ஃபிக்கூர் ரஹிம், ரபாடாவின் பந்துவீச்சில் பந்தை தடுத்த ஆட முயன்று அதனை தவறவிட்டார். ஆனால் அந்த பந்து நேரடியாக அவரது மிடில் ஸ்டம்பை பதம் பார்த்தது. இதனால் அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டு முஷ்ஃபிக்கூர் ரஹிம் பெவிலியன் திரும்பினர். முன்னதாக இப்போட்டியின் முதல் இன்னிங்ஸிலும் முஷ்ஃபிக்கூர் ரஹீம், காகிசோ ரபாடா பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி விக்கெட்டை இழந்தார். இந்நிலையில் ரபாடா விக்கெட் வீழ்த்திய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News