எதிர்கொண்ட முதல் மூன்று பந்துகளில் சிக்ஸர்; ஆஸியை பந்தாடிய பூரன் - வைரலாகும் காணொளி!

Updated: Fri, May 31 2024 21:42 IST
Image Source: Google

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடர் இன்னும் சில தினங்களில் நடைபெறவுள்ள நிலையில், இத்தொடரில் பங்கேற்கும் அணிகள் பயிற்சி ஆட்டங்களில் விளையாடி வருகின்றன. அந்தவகையில் நேற்று நடைபெற்ற 12ஆவது பயிற்சி போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியாது 35 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. 

அதன்படி இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியானது நிக்கோலஸ் பூரன், ரோவ்மன் பாவெல் ஆகியோரின் அதிரடியான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 257 ரன்களைக் குவித்தது. இதில் நிக்கோலஸ் பூரன் 25 பந்துகளில் 5 பவுண்டரி, 8 சிக்ஸர்கள் என 75 ரன்களையும், ரோவ்மன் பாவெல் 4 பவுண்டரி, 4 சிக்ஸர்க்ள் என 52 ரன்களையும் சேர்த்தனர். 

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணியில் ஜோஷ் இங்கிலிஸ் 55 ரன்களையும், நாதன் எல்லிஸ் 39 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 222 ரன்களை மட்டுமே எடுத்து 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ICC (@icc)

இந்நிலையில் இப்போட்டியில் அபாரமாக விளையாடிய நிக்கோலஸ் பூரன் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சிதறடித்தர். அதிலும் அவர் எதிர்கொண்ட முதல் மூன்று பந்துகளையுமே சிக்ஸர்களுக்கு விளாசி இன்னிங்ஸைத் தொடங்கிய பூரன் தொடர்ந்து அபாரமாக விளையாடி 25 பந்துகளில் 75 ரன்களை குவித்து அசத்தினார். இந்நிலையில் நிக்கோலஸ் பூரன் சிக்ஸர்களை விளாசித் தள்ளிய காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை