பவுண்டரி எல்லையில் அசத்தலான கேட்சை பிடித்த மேட் ஹென்றி - வைரலாகும் காணொளி!
நியூசிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஆக்லாந்தில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணிக்கு தொடக்க வீரர் பதும் நிஷங்கா அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்து அசத்தினார். அதன்பின் தசைப்பிடிப்பின் காரணமாக அவர் களத்தில் இருந்து பாதியிலேயே பெவிலியன் திரும்பினார்.
அதன்பின் ஜோடி சேர்ந்த அவிஷ்கா ஃபெர்னாண்டோ - குசால் மெண்டிஸ் இணை அணியை சரிவிலிருந்து மீட்கும் முயற்சியில் இறங்கினர். இதில் அவிஷ்க 17 ரன்னில் ஆட்டமிழக்க, அரைசதம் கடந்த குசால் மெண்டிஸும் 54 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதனத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் சரித் அசலங்கா ரன்கள் ஏதுமின்றியும், காயத்தை பொறுட்படுத்தாமல் விளையாடிய பதும் நிஷங்கா 66 ரன்களிலும் என ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். .
இதையடுத்து களமிறங்கிய வீரர்களில் ஜனித் லியானகே ஒருபுறம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுமுனையில் கள்மிறங்கிய சமிந்து விக்ரமசிங்கே 19 ரன்னிலும், வநிந்து ஹசரங்கா 15 ரன்லும் விக்கெட்டை இழந்தனர். இறுதியில் ஜனித் லியானகேவும் 53 ரன்களில் ஆட்டமிழக்க, இலங்கை அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டை இழப்பிற்கு 290 ரன்களைச் சேர்த்தது. நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்றி 4 விக்கெட், மிட்செல் சாண்ட்னெர் 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து 291 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி விளையாடி வருகிறது. இந்நிலையில் இப்போட்டியில் நியூசிலாந்து வீரர் மேட் ஹென்றி பவுண்டரில் எல்லையில் பிடித்த கேட்ச் ஒன்று ரசிகர்களின் கவனத்தி ஈர்த்துள்ளது. அதன்படி, இன்னிங்ஸின் 30ஆவது ஓவரை மைக்கேல் பிரேஸ்வெல் வீசிய நிலையில் அந்த ஓவரின் 2ஆவது பந்தை எதிர்கொண்ட சரித் அசலங்கா மிட் ஆஃப் திசையில் சிக்ஸர் அடிக்கும் முயற்சியில் தூக்கி அடித்தார்.
ஆனால் அந்த பந்தை அவர் சரியாக டைமிங் செய்யாத நிலையிலும் அது பவுண்டரியை நோக்கி சென்றது. அப்போது அத்திசையில் ஃபீல்டிங் செய்துகொண்டிருந்த் மேட் ஹென்றி பந்தை பிடித்ததுடன் பவுண்டரில் எல்லையை கடக்கும் நிலக்கு தள்ளப்பட்டார். அப்போது சாதுரியமாக செயல்பட்ட அவர் பவுண்டரி எல்லையை தாண்டும் முன்னரே பந்தை தூக்கி போட்டதுடன், மீண்டும் பவுண்டரிக்குள் நுழைந்து அந்த பந்தை கேட்ச் பிடித்து அசத்தினார்.
Also Read: Funding To Save Test Cricket
இதனால் இப்போட்டியில் ரன்கள் ஏதும் எடுக்காத நிலையில் சரித் அசலங்கா தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். இந்நிலையில் பவுண்டரி எல்லையில் மேட் ஹென்றி பிடித்த இந்த கேட்ச் குறித்த காணொளியானது வைரலாகி வருகிறது. இப்போட்டி குறித்து பேசினால் இலக்கை நோக்கி விளையாடி வரும் நியூசிலாந்து அணி தற்போது வரை 5 விக்கெட் இழப்பிற்கு 46 ரன்களை மட்டுமே எடுத்து தடுமாறி வருகிறது.