ஐபிஎல் 2025: நிதீஷ் ரானாவை க்ளீன் போல்டாக்கிய மொயீன் அலி - காணொளி!

Updated: Wed, Mar 26 2025 22:40 IST
Image Source: Google

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி கௌகாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

அதன்படி களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் சஞ்சு சாம்சன் 13 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து கேப்டன் ரியான் பராக்கும் 25 ரன்களுடன் தனது விக்கெட்டை இழந்தார். மேற்கொண்டு மற்றொரு தொடக்க வீரர் யஷஸ்வி ஜெஸ்வாலும் 25 ரன்களுடன் நடையைக் கட்ட, அதன்பின் களமிறங்கிய வநிந்து ஹசரங்கா, நிதீஷ் ரானா உள்ளிட்டோரும் சொற்ப ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.

பின்னர் ஷுபம் தூபே 9 ரன்களுக்கும், பொறுப்புடன் விளையாடி வந்த துருவ் ஜூரெல் 33 ரன்களிலும், ஷிம்ரான் ஹெட்மையர் 7 ரன்களிலும், அதிரடியாக விளையாடிய ஜோஃப்ரா ஆர்ச்சர் 16 ரன்களிலும் என சீரான வேகத்தில் விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 9 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்களை மட்டுமே எடுத்தது. கேகேஆர் தரப்பில் வருண் சக்ரவர்த்தி, மொயீன் அலி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

இந்நிலையில் இப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் நிதீஷ் ரானாவை கேகேஆர் வீரர் மொயீன் அலி க்ளீன் போல்டாக்கி அசத்தினார். அதன்படி இன்னிங்ஸின் 11ஆவது ஓவரை மொயீன் அலி வீசிய நிலையில், அந்த ஓவரின் கடைசி பந்தை எதிர்கொண்ட நிதீஷ் ரானா தடுத்து விளையாட முயற்சித்த நிலையில் பந்தை தவறவிட்டதுடன் க்ளீன் போல்டாகினர். இதனால் இப்போட்டியில் அவர் 7 ரன்களை மட்டுமே எடுத்த கையோடு பெவிலியன் திரும்பினார். இந்நிலையில் நிதீஷ் ரானா க்ளீன் போல்டாகிய காணொளி வைரலாகி வருகிறது. 

ராஜஸ்தான் ராயல்ஸ் பிளேயிங் லெவன்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், நிதிஷ் ராணா, ரியான் பராக் (கேப்டன்), துருவ் ஜூரெல், ஷிம்ரான் ஹெட்மையர், வநிந்து ஹசரங்கா, ஜோஃப்ரா ஆர்ச்சர், மஹீஷ் தீக்ஷனா, துஷார் தேஷ்பாண்டே, சந்தீப் சர்மா

இம்பேக்ட் பிளேயர்ஸ் - குணால் சிங் ரத்தோர், சுபம் துபே, ஆகாஷ் மத்வால், குமார் கார்த்திகேயா, குவேனா மஃபாகா.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பிளேயிங் லெவன்: குயின்டன் டி காக், வெங்கடேஷ் ஐயர், அஜிங்கியா ரஹானே(கேப்டன்), ரிங்கு சிங், மொயீன் அலி, ஆண்ட்ரே ரஸல், ராமன்தீப் சிங், ஸ்பென்சர் ஜான்சன், வைபவ் அரோரா, ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி.

Also Read: Funding To Save Test Cricket

இம்பேக்ட் பிளேயர்ஸ் - அன்ரிச் நார்ட்ஜே, மனிஷ் பாண்டே, அங்கரிஷ் ரகுவன்ஷி, அமித் ராய், லவ்னீத் சிசோடியா.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை