விராட் கோலியை க்ளீன் போல்டாக்கிய முகமது ஷமி- வைரலாகும் காணொளி!
ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2025ஆம் ஆண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் குரூப் ஏ பிரிவில் இருந்து இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
இந்நிலையில் நாளை நடைபெறும் 12ஆவது லீக் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது துபாயில் உள்ள துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே இவ்விரு அணிகளும் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ள நிலையில், புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை தக்கவைக்க இப்போட்டியில் வெற்றிபெறுவது இரு அணிகளுக்கும் முக்கியமாகும்.
இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். அதன்படி ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி வீரர்கள் இன்று தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டனர். இதில் காயமடைந்ததாக கூறப்படும் ரோஹித் சர்மா, முகமது ஷமி ஆகியோரும் வலைகளில் திவீரமான பயிற்சிய மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில் இன்றைய பயிற்சியின் போது முகமது ஷமி பந்துவீச்சை எதிர்கொனட் விராட் கோலி க்ளீன் பொல்டாக்கிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி விராட் கோலி வலைகளில் பேட்டிங் செய்யும் போது முகமது ஷமியை எதிர்கொண்டார். அப்போது ஷமி வீசிய பந்தை விராட் கோலி அடிக்க முயன்று தவறவிட்டதுடன், க்ளீன் பொல்டும் ஆனார். இக்காணொளியை ஐசிசி தங்களின் அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
தற்போது 34 வயதான முகமது ஷமி கடந்த காலங்களில் காயங்கள் காரணமாக மிகவும் சிரமப்பட்டார். நடப்பு சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் போதும், காயம் காரணமாக களத்தில் முழு பலத்தை காட்ட முடியாமல் சற்று திணறி வந்தார். இருப்பினும், இப்போது அவரது ஃபார்மைப் பார்த்தால், அவர் நியூசிலாந்திற்கு ஒரு பெரிய அச்சுறுத்தலாக இருப்பார் என்று தெளிவாகிறது. மேலும் இவ்விரு அணிகளும் கடைசியாக மோதிய ஐசிசி போட்டியிலும் முகமது ஷமி அசத்தி இருந்தார்.
Also Read: Funding To Save Test Cricket
அப்போட்டியில் 9.5 ஓவர்களை வீசிய முகமது ஷமி 57 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேற்கொண்டு இந்திய அணிக்காக இதுவரை 105 ஒருநாள் போட்டிகளில் விளையாடி முகமது ஷமி அதில் 202 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதுதவிர்த்து அவர் 64 டெஸ்டில் 229 விக்கெட்டுகளையும், 25 டி20 போட்டிகளில் 27 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.