மின்னல் வேக ஸ்டம்பிங்கால் கில்லை வெளியேற்றிய தோனி; வைரல் காணொளி! 

Updated: Mon, May 29 2023 20:49 IST
Image Source: Google

16ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் குஜராத் - சென்னை அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் எம்எஸ் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன்பின்னர் தேசிய கீதம் பாடப்பட்டு ஆட்டம் தொடங்கியது. இதன் பின்னர் குஜராத் அணி தரப்பில் ஷுப்மன் கில் - சாஹா தொடக்கம் கொடுத்தனர்.

இதில் 2ஆவது ஓவரின் போது ஷுப்மன் கில் 3 ரன்கள் எடுத்திருந்த போது தீபக் சஹரிடம் கேட்ச் கொடுத்தார். ஆனால் அந்த கேட்சை சஹர் தவறவிட, கில் அதிரடிக்கு திரும்பினார். குறிப்பாக துஷார் தேஷ்பாண்டே வீசிய ஒரே ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரி விளாசிய அவர், மீண்டும் தீக்சனா வீசிய 6ஆவது ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரி விளாசி மிரட்டினார். இதன் காரணமாக குஜராத் அணி பவர் பிளே ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 62 ரன்கள் சேர்த்தது. 

இந்த நிலையில் விக்கெட் வீழ்த்த வேண்டிய தேவை இருந்த நிலையில், பந்தை ஜடேஜாவின் கைகளில் தோனி கொடுத்தார். முதல் 5 பந்துகளில் வெறும் 5 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட, அந்த ஓவரின் முதல் 5 பந்துகளையும் ஸ்டம்ப் டூ ஸ்டம்ப் லைனிலேயே ஜடேஜா வீசினார். இதையடுத்து கடைசி பந்தை சுழல வைக்க, அதிரடி ஆட்டக்காரர் சுப்மன் கில் தோனியும் ஜடேஜாவும் இணைந்து விரித்த வலையில் சிக்கினார். 

 

அந்த பந்தை டவுன் தி ட்ராக் வந்து அடிக்க முயன்ற கில், தோனியின் அபாரமான ஸ்டம்பிங்கால் 39 ரன்களில் வெளியேறினார். இதன் மூலம் சிஎஸ்கே ஆட்டத்திற்குள் மீண்டு வந்துள்ளது. இந்நிலையில் எம் எஸ் தோனி ஸ்டம்பிங் செய்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை