அபாரமான யார்க்கர் மூலம் மிட்செல் மார்ஷை க்ளீன் போல்டாக்கிய முகேஷ் குமார் - காணொளி!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. லக்னோவில் உள்ள ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் தொடக்க வீரர்கள் ஐயடன் மார்க்ரம் 52 ரன்களையும், மிட்செல் மார்ஷ் 45 ரன்களையும், இறுதியில் ஆயூஷ் பதோனி 36 ரன்களையும் எடுத்ததைத் தவிர்த்து மற்ற வீரர்கள் ரன்களைச் சேர்க்க தவறினர். இதன் காரணமாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்களை மட்டுமே எடுத்தது. டெல்லி அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய முகேஷ் குமார் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி இலக்கை நோக்கி விளையாடி வருகிறது. இந்நிலையில் இப்போட்டியில் முகேஷ் குமார் விக்கெட்டை வீழ்த்திய காணொளி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி, இன்னிங்ஸின் 14ஆவது ஓவரை முகேஷ் குமார் வீசிய நிலையில் அந்த ஓவரின் இரண்டாவது பந்தை எதிர்கொண்ட அப்துல் சமத் தூக்கி அடிக்கும் முயற்சியில் பந்துவீச்சாளரிடமே கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் அந்த ஓவரின் கடைசி பந்தை மிட்செல் மார்ஷ் எதிர்கொண்ட நிலையில் முகேஷ் குமார் தனது அபாரமான இன்ஸ்விங் யார்க்கை பந்தை வீசினார். இதை கணிக்க தவறிய மிட்செல் மார்ஷ் பந்தை முழுவதுமாக தவறவிட்டதுடன் க்ளீன் போல்டும் ஆனார். இதனால் இப்போட்டியில் மிட்செல் மார்ஷ் அரைசதம் அடிக்கும் வாய்ப்பையும் தவறவிட்டார். இந்நிலையில் மிட்செல் மார்ஷ் ஆட்டமிழந்த காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் பிளேயிங் லெவன்: ஐடன் மார்க்ரம், மிட்செல் மார்ஷ், நிக்கோலஸ் பூரன், ரிஷப் பந்த்(கேப்டன்), அப்துல் சமத், டேவிட் மில்லர், ஷர்துல் தாக்கூர், திக்வேஷ் சிங் ரதி, ரவி பிஷ்னோய், அவேஷ் கான், பிரின்ஸ் யாதவ்
இம்பாக்ட் வீரர்கள்: ஆயுஷ் படோனி, மயங்க் யாதவ், ஷாபாஸ் அகமது, மேத்யூ பிரீட்ஸ்கே, ஹிம்மத் சிங்
டெல்லி கேப்பிட்டல்ஸ் பிளேயிங் லெவன்: அபிஷேக் போரல், கருண் நாயர், கே.எல். ராகுல், அக்சர் படேல்(கேப்டன்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அசுதோஷ் சர்மா, விப்ராஜ் நிகம், மிட்செல் ஸ்டார்க், குல்தீப் யாதவ், துஷ்மந்த சமீரா, முகேஷ் குமார்
Also Read: LIVE Cricket Score
இம்பாக்ட் வீரர்கள்: ஜேக் ஃப்ரேசர் மெக்கர்க், சமீர் ரிஸ்வி, டோனோவன் ஃபெரீரா, மாதவ் திவாரி, திரிபுரானா விஜய்