ENG vs IND: பயிற்சியைத் தொடங்கிய ஜெகதீசன்; வைரலாகும் காணொளி!

Updated: Wed, Jul 30 2025 12:23 IST
Image Source: Google

ENG vs IND, 5th Test: இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் தமிழக வீரர் நாராயண் ஜெகதீசன் பிளேயிங் லெவனில் இடம்பெற அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகளைக் கொண்ட ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நான்று போட்டிகளின் இங்கிலாந்து அணி இரண்டு போட்டிகளிலும், இந்திய அணி ஒரு போட்டியிலும் வெற்றியையும், ஒரு போட்டி டிராவிலும் முடிவடைந்துள்ளது. இதன் காரணமாக இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகித்தது.

இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை லண்டனில் உள்ள கெனிங்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இந்திய அணி வெற்றிபெற்றால் தொடரை சமன்செய்யும். இங்கிலாந்து அணி இப்போட்டியில் வெற்றி அல்லது டிரா செய்தால் தொடரைக் கைப்பற்றும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.

இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக இந்திய அணி வீரர் ரிஷப் பந்த் காயம் காரணமாக தொடரிலிருந்து வெளியேறினார். மேலும் அவருக்கு மற்றாக தமிழ்நாட்டைச் சேர்ந்த நாராயண் ஜெகதீசன் இந்திய டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதையடுத்து இந்திய அணியுடன் இணைந்துள்ள ஜெகதீசன் நேற்றைய தினம் தனது பயிற்சியை தொடங்கினார். மேலும் இதுகுறித்த காணொளியையும் பிசிசிஐ தங்களது சமூக வலைதள பக்கங்களில் பதிவுசெய்துள்ளது. 

இதன் காரண்மாக அவர் இந்திய பிளேயிங் லெவனில் இடம்பிடிக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ஜெகதீசன் பயிற்சி மேற்கொள்ளும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. உள்ளூர் போட்டிகளில் தமிழ்நாடு அணிக்காக விளையாடி வரும் ஜெகதீசன் இதுவரை 52 முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 10 சதங்கள் மற்றும் 14 அரைசதங்களுடன் 3,373 ரன்களைச் சேர்த்துள்ளார். இதனால் கடைசி டெஸ்ட் போட்டியில் அவர் அறிமுகமாகவும் வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Also Read: LIVE Cricket Score

இந்திய டெஸ்ட் அணி: ஷுப்மன் கில் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், சாய் சுதர்ஷன், அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர், ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜூரல், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், அன்ஷுல் கம்போஜ், நாராயண் ஜெகதீசன்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::