பவுண்டரி எல்லையில் அசாத்தலான கேட்சை பிடித்த ரோவ்மன் - ஹோல்டர் கூட்டணி; வைரலாகும் காணொளி!

Updated: Sat, Sep 14 2024 10:24 IST
Image Source: Google

பார்படாஸ் ராயல்ஸ் மற்றும் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான சிபிஎல் லீக் போட்டி இன்று பார்படாஸில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த பார்படாஸ் ராயல்ஸ் அணியானது தொடக்கத்திலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இருப்பினும் அந்த அணி கேப்டன் ரோவ்மன் பாவெல் அதிரடியாக விளையாடியதன் மூலம், 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 7 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்களைச் சேர்த்தது. 

அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ரோவ்மன் பாவேல் 59 ரன்களையும், குயின்டன் டி காக் 39 ரன்களையும் சேர்த்தனர். நைட் ரைடர்ஸ் அணி தரப்பில் வாக்கம் சலாம்கெயில் 3 விக்கெட்டுகளையும், அகீல் ஹொசைன், சுனில் நரைன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அதன்பின் எளிய இலக்கை நோக்கி விளையாடிய டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்கும் எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. 

மேற்கொண்டு அணியின் நட்சத்திர வீரர்கள் பாரிஸ், நிக்கோலஸ் பூரன் ஆகியோர் தலா 35 ரன்களையும், கேசி கார்டி 32 ரன்களையும் சேர்த்த நிலையில், கீரன் பொல்லார்ட், ஆண்ட்ரிஸ் கௌஸ், சுனில் நரைன், ஜேசன் ராய் உள்ளிட்டோர் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். இறுதியில் அகீல் ஹொசைன் 20 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்த நிலையில், டெரன்ஸ் ஹிண்ட்ஸ் சிக்ஸர் அடித்து அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார். 

இதன்மூலம் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியானது 19.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 2 விக்கெட் வித்தியாசத்தில் பார்படாஸ் ராயல்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இதன்மூலம் நைட் ரைடர்ஸ் அணியானது நடப்பு சீசனில் தங்களது மூன்றாவது வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. மேற்கொண்டு இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அகீல் ஹொசைன் ஆட்டநாயகன் விருதை வென்றார். 

 

இந்நிலையில் இப்போட்டியில் ராயல்ஸ் அணி தோல்வியைத் தழுவினாலும், அந்த அணி கேப்டன் ரோவ்மன் பாவெல் பிடித்த கேட்ச் ஒன்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதன்படி, நைட் ரைடர்ஸ் அணி வீரர் நிக்கோலஸ் பூரன் சிக்ஸர் அடிக்கு முயற்சித்து பந்தை லாங் ஆஃப் திசையில் தூக்கி அடித்தார். அதனை சரியாக கணித்த ரோவ்மன் பாவேல் பின் பக்கமாக ஓடியதுடன் பந்தை கேட்ச் பிடித்தும் அசத்தினார். 

Also Read: Funding To Save Test Cricket

ஆனாலும் அவரால் தனது ஓட்டத்தை கட்டுபடுத்தத நிலையில் பவுண்டரி எல்லையை தாண்டிவாரே பந்தை தூக்கி எறிந்தார். அப்போது அங்கு இருந்த மற்றொரு வீரரான ஜேசன் ஹோல்டர் பந்தை பிடித்து அசத்தினார். இதன்மூலம் 35 ரன்களைச் சேர்த்து விளையாடி வந்த நிக்கோலஸ் பூரன் தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். இந்நிலையில் ரோவ்மன் பாவெல் பிடித்த இந்த கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை