ஐபிஎல் 2024: ஸ்டொய்னிஸிற்கு அதிர்ச்சி கொடுத்த சால்ட் கேட்ச்; காணொளி!

Updated: Sun, Apr 14 2024 18:21 IST
ஐபிஎல் 2024: ஸ்டொய்னிஸிற்கு அதிர்ச்சி கொடுத்த சால்ட் கேட்ச்; காணொளி! (Image Source: Google)

கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது நிக்கோலஸ் பூரன், கேஎல் ராகுல் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்களை மட்டுமே சேர்த்தது. 

லக்னோ அணி தரப்பில் அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரன் 2 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 45 ரன்களையும், கேப்டன் கேஎல் ராகுல் 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 39 ரன்களையும் சேர்த்தனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். இதனையடுத்து 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விளையாடி வருகிறது.

இந்நிலையில் இப்போட்டியில் கேகேஆர் அணியின் விக்கெட் கீப்பர் பில் சால்ட் பிடித்த கேட்ச் குறித்த காணொளி ஒன்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதன்படி லக்னோ அணி பேட்டிங்கின் போது இன்னிங்ஸின் 12ஆவது ஓவரை வருண் சக்ரவர்த்தி வீசினார். அந்த ஓவரில் இரண்டாவது பந்தை சிக்ஸருக்கு விளாசிய மார்கஸ் ஸ்டொய்னின் மீண்டும் அந்த ஓவரின் நான்காவது பந்தையும் பவுண்டரி அடிக்க முயற்சித்தார். 

 

ஆனால் பந்த அவர் எதிர்பார்த்த லெந்தில் வராததால் அதனை தடுக்க முயற்சித்தார். ஆனால் பந்து அவரது பேட்டில் பட்டு அதன்பின் தொடை பகுதியில் பட்டு சென்றது. இதனை சரியாக கணித்த விக்கெட் கீப்பர் பில் சால்ட் அபாரமாக டைவ் அடித்ததுடன் பந்தையும் கேட்ச் பிடித்து அசத்தினார். இந்நிலையில் இக்காணொளி தான் தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை