மதீஷா பதிரனா பந்துவீச்சில் ஹெலிகாப்டர் ஷாட்டில் சிக்ஸர் விளாசிய பிரப்சிம்ரன் சிங் - காணொளி!

Updated: Thu, May 01 2025 15:25 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து சிஎஸ்கேவை பேட்டிங் செய்ய அழைத்தது. 

அதன்படி களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சாம் கரண் 88 ரன்களையும், டெவால்ட் பிரீவிஸ் 32 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 190 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பஞ்சாப் கிங்ஸ் தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய யுஸ்வேந்திர சஹால் ஹாட்ரிக் உள்பட 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். 

பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியில் தொடக்க வீரர் பிரப்ஷிம்ரன் சிங் 54 ரன்களையும், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 72 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தாலும், பஞ்சாப் கிங்ஸ் அணி 19.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 4 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கேவை வீழ்த்தியது. இந்த தோல்வியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்த முதல் அணியாகவும் வெளியேறியது.

இந்நிலையில் இப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி வீரர் பிரப்ஷிம்ரன் சிங் சிஎஸ்கேவின் நட்சத்திர பந்துவீச்சாளர் மதீஷா பதிரனா பந்துவீச்சில் அடித்த சிக்ஸர் ஒன்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதன்படி இன்னிங்ஸின் 11ஆவது ஓவரை மதீஷா பதிரனா வீசிய நிலையில் அந்த ஓவரின் இரண்டாவது பந்தை யார்க்கர் பந்தாக வீசினார். அந்த பந்தை எதிர்கொண்ட பிரப்ஷிம்ரன் சிங் டிப் மிட் விக்கெட் திசைக்கு மேல் ஹெலிக்காப்டர் ஷாட் மூலம் அபார சிக்ஸரை விளாசினர். 

Also Read: LIVE Cricket Score

அதிலும் குறிப்பாக அந்த ஷாட்டிற்கு பிரபலமான மகேந்திர சிங் தோனி விக்கெட்டிற்கு பின்னால் நின்றிருந்த நிலையில், பிரப்ஷிம்ரன் சிங் அதே ஷாட்டின் மூலம் சிக்ஸரை விளாசியது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. மேற்கொண்டு இப்போட்டியில் அபாரமாக செயல்பட்ட பிரப்ஷிம்ரன் சிங் 5 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 54 ரன்களையும் சேர்த்து அணியின் வெற்றியில் பங்கு வகித்தார். இந்நிலையில் பிரப்ஷிம்ரன் சிங் விளாசிய இந்த சிக்ஸர் குறித்த காணொளி வைரலாகி வருகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை