பதிரானா பந்துவீச்சில் ஹாட்ரிக் சிக்சர்களை விளாசிய பிரியான்ஷ் ஆர்யா - காணொளி
பஞ்சாப் கிங்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி இன்று நடைபெற்றது. சண்டிகரில் உள்ள மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணியில் பிரப்ஷிம்ரன் சிங், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், மார்கஸ் ஸ்டொய்னிஸ், நேஹால் வதேரே, கிளென் மேக்ஸ்வெல் உள்ளிட்டோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் இணைந்த பிரியான்ஷ் ஆர்யா மற்றும் ஷஷாங்க் சிங் இணை பொறுப்புடன் விளையாடியதோடு, அடுத்தடுத்து பவுண்டரிகளையும் விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரியான்ஷ் ஆர்யா 39 பந்துகளில் சதமடித்ததுடன், 7 பவுண்டரி, 9 சிக்ஸர்கள் என 103 ரன்களில் ஆட்டமிழந்தார். இருப்பினும் இறுதிவரை களத்தில் இருந்த ஷஷாங்க் சிங் 52 ரன்களையும், மார்கோ ஜான்சென் 34 ரன்களையும் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தனர். இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 219 ரன்களைக் குவித்தது.
இந்நிலையில் இப்போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரியான்ஷ் ஆர்யா தனது இமாலய சிக்ஸர்களின் மூலமாக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அதிலும் குறிப்பாக மதீஷா பதிரானாவின் ஓவரில் அவர் அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை விளாசினார். அதன்படி இன்னிங்ஸின் 13ஆவது ஓவரை பதிரான விசிய நிலையில், அதனை எதிர்கொண்ட ஆர்யா அடுத்தடுத்து 3 சிக்ஸர்களை பறக்கவிட்டார். இந்நிலையில் அவர் அடுத்தடுத்து சிக்ஸர்களை விளாசிய காணொளியும் வைரலாகி வருகிறது.
பஞ்சாப் கிங்ஸ் பிளேயிங் லெவன்: பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங், ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), ஷஷாங்க் சிங், மார்கஸ் ஸ்டோய்னிஸ், நேஹால் வதேரா, கிளென் மேக்ஸ்வெல், மார்கோ ஜான்சன், அர்ஷ்தீப் சிங், லோக்கி ஃபெர்குசன், யுஸ்வேந்திர சாஹல்
இம்பேக்ட் வீரர்கள்: சூர்யன்ஷ் ஷெட்ஜ், யாஷ் தாக்கூர், பிரவீன் துபே, அஸ்மத்துல்லா ஓமர்சாய், வைஷாக் விஜய்குமார்
சென்னை சூப்பர் கிங்ஸ் பிளேயிங் லெவன்: ரச்சின் ரவீந்திரா, டெவான் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட்(கேப்டன்), விஜய் சங்கர், ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி, ரவிச்சந்திரன் அஷ்வின், நூர் அகமது, முகேஷ் சவுத்ரி, கலீல் அகமது, மதீஷா பத்திரனா
Also Read: Funding To Save Test Cricket
இம்பேக்ட் வீரர்கள்: சிவம் துபே, ஜேமி ஓவர்டன், ராகுல் திரிபாதி, தீபக் ஹூடா, அன்ஷுல் கம்போஜ்