ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் இன்று தொடங்கிய நிலையில் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் உலகின் பல்வேறு நாட்டைச் சேர்ந்த நட்சத்திர வீரர்களும் இணைந்து விளையாடவுள்ளதால் இத்தொடரின் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. அந்தவகையில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் தீவிரமாக தயாராகி வருகிறது. 

Advertisement

அதன்படி நாளை நடைபெறும் மூன்றாவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்த்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விளையாடவுள்ளது. இதற்காக கேகேஆர் அணி வீரர்கள் திவீரமாக பயிற்சி செய்துவரும் நிலையில், அந்த அணியில் இடம்பிடித்துள்ள ஆஃப்கானிஸ்தான் அணியைச் சேர்ந்த அதிரடி தொடக்க வீரர் ரஹ்மனுல்லா குர்பாஸும் கேகேஆர் பயிற்சி முகாமில் இணைந்து பயிற்சி மேற்கொண்டு வருகிறார். 

Advertisement

இந்நிலையில் இன்றைய தினம் ரஹ்மனுல்லா குர்பாஸ் தனது சக வீரர்களுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்ட போது, அவரை சந்திந்த சிறுவன் ஒருவர் களத்திற்கு வந்தார். அப்போது குர்பாஸ் தன்னை சந்திக்க வந்த சிறுவனிடம் என்ன வேண்டும் என்று கேட்க, அச்சிறுவரும் உங்களது கையுறைகளை பரிசாக வழங்குமாறு கூறினார். அப்போது நேரத்தை சிறிதும் வீணடிக்காமல் குர்பாஸ் தனது கையுறையை அச்சிறுவனிடம் வழங்கியதுடன், அதில் தனது கையொப்பத்தையும் இட்டார். இந்நிலையில் இக்காணொளியானது இணையத்தில் வைரலானாது.

 

முன்னதாக இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஒருநாள் தொடரின் போது ஆஃப்கானிஸ்தான் அணிக்காக விளையாடிய ரஹ்மனுல்லா குர்பாஸ், தனது சொந்தநாட்டிற்கு செல்வதற்கு முன்னதாக தீபாவளிக்கு முந்தைய தினம் சாலையோரத்தில் உறங்கிக்கொண்டிருந்த வர்களுக்கு அருகில் பணத்தை வைத்துச்சென்றார். அதிலும் குறிப்பாக அதிகாலையில் அவர் இச்சயலை செய்ததன் மூலமாக அவரை யாராலும் அடையாளம் காணமுடியவில்லை. இருப்பினும் அப்போது அங்கிருந்த ஒருநபர் அதனை காணொளியாக பதிவுசெய்திருந்தார். 

அதன்பின் தான் அக்காணொளியில் பணத்தை வைத்தது ரஹ்மனுல்லா குர்பாஸ் என்பது தெரியவந்தது. அதன்பின் அக்காணொளி வைரலானதுடன் ரஹ்மனுல்லா குர்பாஸுக்கு பலரது தரப்பிலும் வாழ்த்துகள் குவிந்தது. இந்நிலையில் தற்போதும் ரஹ்மனுல்லா குர்பாஸின் உதவும் மனப்பான்மைக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News