ஐபிஎல் 2022: ரஷித் கான் மேஜிக்கில் குஜராத் த்ரில் வெற்றி - காணொளி!

Updated: Thu, Apr 28 2022 11:57 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 65 ரன்களையும், ஐடன் மார்க்ரம் 56 ரன்களையும் சேர்த்தனர். 

அதன்பின் 96 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணியில் தொடக்க பேட்டர் ரித்திமான் சாஹா மட்டுமே நிலைத்து ஆடினார்.
 
ஷுப்மன் கில் 22, கேப்டன் ஹார்திக் பாண்டியா 10, டேவிட் மில்லர் 17, அபிநவ் மனோகர் 0 ரன்களுடன் உம்ரன் மாலிக் பந்தில் அவுட்டாகி திரும்பினர்,.மறுமுனையில் அடித்த ஆடிய சாஹா 1 சிக்ஸர், 11 பவுண்டரியுடன் 38 பந்துகளில் 68 ரன்களை விளாசி உம்ரன் பந்தில் போல்டானார்.

பின்னர் ராகுல்  திவேத்தியா - ரஷீத் கான் இணை அபாரமாக ஆடி தங்கள் அணிக்குவெற்றியைத் தேடித் தந்தது. டிவாட்டியா 2 சிக்ஸர், 4 பவுண்டரியுடன் 21 பந்துகளில் 40 ரன்களையும், ரஷீத் கான் 4 சிக்ஸருடன் 11 பந்துகளில் 31 ரன்களை விளாசி அவுட்டாகாமல் இருந்தனர்.

 

கடைசி பந்தில் 3 ரன்கள் வெற்றிக்கு தேவை என்ற நிலையில் ஜன்சென் வீசிய பந்தை சிக்ஸராக விளாசினார் ரஷீத் கான். 20 ஓவர்களில் 199/5 ரன்களை குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது குஜராத்.

ஹைதராபாத் தரப்பில் உம்ரன் மாலிக் அசத்தலாக பந்துவீசி 5/25 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த வெற்றியால் குஜராத் அணி 14 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியது. ஹைதராபாத் அணி 3ஆம் இடத்தில் உள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை