அபாரமான கேட்சை பிடித்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய ரஷித் கான் - காணொளி!
குஜராத் டைட்டன்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணியில் தொடக்க வீரர்கள் சாய் சுதர்ஷன் 48 ரன்களையும், கேப்டன் ஷுப்மன் கில் 76 ரன்களையும், அடுத்து களமிறங்கிய ஜோஸ் பட்லரும் 64 ரன்களையும் சேர்த்து அசத்தினர். இதன்மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழப்பிற்கு 224 ரன்களைச் சேர்த்தது. சன்ரைசர்ஸ் அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜெய்தேவ் உனாத்கட் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் அதிரடியான தொடக்கத்தை கொடுத்து முதல் விக்கெட்டிற்கு 49 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டிராவிஸ் ஹெட் 4 பவுண்டரிகளுடன் 20 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ரஷித் கானின் அபாரமான கேட்ச்சினால் விக்கெட்டை இழந்தார்.
அதன்படி இன்னிங்ஸின் 5ஆவது ஓவரை பிரஷித் கிருஷ்ணா வீசிய நிலையில் ஓவரின் 3ஆவது பந்தை எதிர்கொண்ட டிராவிஸ் ஹெட் சிக்ஸர் அடிக்கும் முயற்சியில் டீப் மிட் விக்கெட் திசையை நோக்கி அடித்த நிலையில், பந்து அவரது பேட்டில் சரியாக படாததால் காற்றில் இருந்தது. அப்போது டீப் ஸ்கொயர் திசையில் ஃபீல்டிங் செய்துகொண்டிருந்த ரஷிதி கான் அங்கிருந்து ஓடி வந்ததுடன் அபாரமான கேட்சையும் பிடித்து ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
மேற்கொண்டு ரஷித் கானின் இந்த கேட்ச்சானது நடப்பு ஐபிஎல் தொடரின் மிகச்சிறந்த கேட்ச்சுகளில் ஒன்றாகவும் பார்க்கப்படுகிறது. இதனையடுத்து ரஷித் கான் பிடித்த இந்த அபாரமான கேட்சை பிடித்த காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்போட்டி குறித்து பேசினால், இலக்கை நோக்கி விளையாடி வரும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தற்போது வரையிலும் 2 விக்கெட் இழப்பிற்கு 120 ரன்களைச் சேர்த்துள்ளது.
குஜராத் டைட்டன்ஸ் பிளேயிங் லெவன்: ஷுப்மன் கில் (கேப்டன்), பி சாய் சுதர்சன், ஜோஸ் பட்லர், ஷாருக் கான், வாஷிங்டன் சுந்தர், ராகுல் தெவாடியா, ரஷித் கான், முகமது சிராஜ், ஜெரால்ட் கோட்ஸி, சாய் கிஷோர், பிரசித் கிருஷ்ணா
இம்பேக்ட் வீரர்கள்: இஷாந்த் சர்மா, மஹிபால் லோம்ரோர், அனுஜ் ராவத், அர்ஷத் கான், ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பிளேயிங் லெவன்: அபிஷேக் சர்மா, இஷான் கிஷான், நிதிஷ் குமார் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென் , அனிகேத் வர்மா, கமிந்து மெண்டிஸ், பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஹர்ஷல் படேல், ஜெய்தேவ் உனட்கட், ஜீஷன் அன்சாரி, முகமது ஷமி
Also Read: LIVE Cricket Score
இம்பேக்ட் வீரர்கள்: அபினவ் மனோகர், சச்சின் பேபி, டிராவிஸ் ஹெட், ராகுல் சாஹர், வியான் முல்டர்