ஐபிஎல் 2025: தீவிர வலைபயிற்சியில் ராஜத் பட்டிதார் - காணொளி!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் வரும் மார்ச் 22ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இதில் நடைபெறும் முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இப்போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதற்காக இரு அணி வீரர்களும் தற்போது பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இத்தொடருக்கான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ஏனெனில் தற்போதுள்ள ஆர்சிபி அணி முற்றிலும் ஒரு புதிய அணியாக உருவாகியுள்ளது. அதிலும் குறிப்பாக அந்த அணியின் கேப்டனாக ராஜத் பட்டிதார் நியமிக்கப்பட்டுள்ளதால், அவர் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
அதன் ஒருபகுதியாக எதிர்வரும் ஐபிஎல் தொடருக்கு தயாராகும் வகையில் ஆர்சிபி அணி கேப்டன் ராஜத் பாட்டிதார் தனது பயிற்சியை தொடங்கியுள்ளார். இந்நிலையில் ராஜத் பட்டிதார் பயிற்சி மேற்கொண்டு வரும் காணொளியும் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக ராஜத் பட்டிதார் இமாலய சிக்ஸர்களைய்ம் பறக்கவிட்டு மிரட்டினார். இதன் காணொளிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
முன்னதாக இந்தியாவில் நடந்து முடிந்த சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் மத்திய பிரதேச அணியின் கேப்டனாக செயல்பட்ட ராஜத் பட்டிதார் அத்தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். மேற்கொண்டு கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற ராஜத் பட்டிதார் பங்களித்தார். இதனால் இந்த சீசனில் அவரின் தலைமையின் கீழ் அந்த அணி சாதிக்குமா என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
ஆர்சிபி அணியின் கணிக்கப்பட்ட லெவன்: விராட் கோலி, பில் சால்ட், தேவ்தத் படிக்கல், ரஜத் படிதார் (கேட்ச்), லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா (வி.கே.), டிம் டேவிட், க்ருனால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், யாஷ் தயாள், ஜோஷ் ஹேசில்வுட்/நுவான் துஷாரா.
Also Read: Funding To Save Test Cricket
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: விராட் கோலி, ரஜத் பட்டிதார் (கேப்டன்), யாஷ் தயாள், ஜோஷ் ஹேசில்வுட், பில் சால்ட், ஜிதேஷ் சர்மா, லியாம் லிவிங்ஸ்டோன், ரசிக் தார், சுயாஷ் சர்மா, குர்னால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ஸ்வப்னில் சிங், டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்ட், நுவான் துஷாரா, மனோஜ் பந்தேஜ், ஜேக்கப் பெத்தேல், தேவ்தத் பாடிக்கல், ஸ்வஸ்திக் சிகாரா, லுங்கி இங்கிடி, அபிநந்தன் சிங், மோஹித் ரதி.