வலியால் துடித்த ரிச்சர்ட் ந்ங்கரவா; ஒரு கணத்தில் மாறிய ரிஷித் கான் முகம் - வைரலாகும் காணொளி!

Updated: Mon, Jan 06 2025 12:50 IST
Image Source: Google

ஜிம்பாப்வே - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான புத்தாண்டு டெஸ்ட் போட்டியானது புலவாயோவில் உள்ள குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 157 ரன்களை மட்டுமே சேர்த்திருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது.

இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஜிம்பாப்வே அணியில் சிக்கந்தர் ரஸா 61 ரன்களையும், கிரேய்க் எர்வின் 75 ரன்களையும் சேர்த்த நிலையில், இறுதியில் அதிரடியாக விளையாடிய சீன் வில்லியம்ஸ் 49 ரன்களையும் சேர்த்து அணியை முன்னிலைக்கு அழைத்துச் சென்றனர். இதன்மூலம் ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்ஸில் 243 ரன்களைச் சேர்த்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

அதன்பின் இரண்டாவது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த ஆஃப்கானிஸ்தான் அணிக்கு ரஹ்மத் ஷா 139 ரன்களையும், இஸ்மத் அலாம் 101 ரன்களையும் சேர்த்ததன் மூலம் 363 ரன்களைக் குவித்தது. மேற்கொண்டு ஜிம்பாப்வே அணிக்கு 278 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அதன்பின் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிவரும் ஜிம்பாப்வே அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. 

இதனால் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் ஜிம்பாப்வே அணி 8 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்களைச் சேர்த்தது. இதில் கிரய்க் எர்வின் 53 ரன்களுடன் களத்தில் உள்ளார். ஆஃப்கான் தரப்பில் ரஷித் கான் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனையடுத்து 73 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஜிம்பாப்வே அணி விளையாடவுள்ளது. இந்நிலையில் இப்போட்டியில் ரிச்சர்ட் ந்ங்கரவா செய்த செயல் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. 

உண்மையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காவது நாளில் ஆப்கானிஸ்தானுக்கு வெற்றிக்கு இரண்டு விக்கெட்டுகள் மட்டுமே தேவைப்பட்டபோது இந்த சம்பவம் நடந்தது. கிரேக் எர்வின் மற்றும் ரிச்சர்ட் ந்ங்கர்வா ஜோடி களத்தில் பேட்டிங் செய்து கொண்டிருந்தது, அப்போது நேற்றைய நாளின் கடைசி ஓவரை ஆஃப்கான் தரப்பில் ரஷித் கான் வீச தயாரானர். அச்சமயத்தில் ஜிம்பாப்வே வீரர் ரிச்சர்ட் ந்ங்கர்வா அசௌரியாக இருப்பது போல் இருந்தார்.

அதன்பின் அவர் தனது வலதுகாலை பிடித்து வலியால் நிற்கக்கூட முடியாமல் சிரமபடுவது கேமராவில் பதிவானது. இதனால் அவருக்கு உதவ மருத்துவக் குழு களத்திற்கு வர வேண்டியதாயிற்று. ஆனால் இது உண்மையில் காயமா அல்லது போட்டியை நிறுத்துவதற்கான நாடகமா என்பது ந்ங்கரவாவுக்கு மட்டுமே தெரியும். ஏனெனில் அச்சமயத்தி ரஷித் கான் அபாரமான ஃபார்மில் இருந்ததுடன், அந்த இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். 

Also Read: Funding To Save Test Cricket

இதனால் அந்த ஓவரை எதிர்கொள்ளாமல் இருப்பதற்காக கூட ந்ங்கரா இவ்வாறு செய்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எதுவாயினும், ஜிம்பாப்வே அணி எதிர்பார்த்தது போல் நேரம் மற்றும் போதிய வெளிச்சமின்மை காரணமாக நான்காம் நாள் ஆட்டம் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ரிச்சர்ட் ந்ங்கரவா கயமடைந்து வலியால் துடித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை