IND vs SA, 2nd T20I: அரைசதத்தை தியாகம் செய்த விராட் கோலி; வைரல் காணொளி!

Updated: Sun, Oct 02 2022 22:25 IST
Image Source: Google

இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கும் நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது டி.20 போட்டி இன்று நடைபெற்று வருகிறது.

கவுஹாத்தி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணியின் கேப்டன் டெம்பா பவுமா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா மற்றும் கே.எல் ராகுல் ஆகியோர் மிக சிறப்பான துவக்கம் கொடுத்தனர். ரோஹித் சர்மா 43 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 22 பந்துகளில் அரைசதம் அடித்த கேஎல் ராகுல் 57 ரன்கள் எடுத்த போது விக்கெட்டை இழந்தார்.

இதன்பின் மூன்றாவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த விராட் கோலி – சூர்யகுமார் யாதவ் கூட்டணி தென் ஆப்ரிக்கா அணியின் பந்துவீச்சை நாளாபுறமும் சிதறடித்தது. குறிப்பாக சூர்யகுமார் யாதவ், தென் ஆப்ரிக்கா அணியின் பந்துவீச்சை அசால்டாக சிதறடித்து 18 பந்துகளில் அரைசதமும் அடித்து அசத்தினார்.

தென் ஆப்ரிக்கா வீரர்களின் அனைத்து திட்டங்களையும் தவிடுபொடியாக்கிய சூர்யகுமார் யாதவ் 22 பந்துகளில் 5 சிக்ஸர் மற்றும் 5 பவுண்டரிகளுடன் 61 ரன்கள் எடுத்திருந்த போது கவனக்குறைவால் ரன் அவுட்டானார்.

சூர்யகுமார் யாதவ் விக்கெட்டை இழந்தபிறகு அதிரடி ஆட்டத்தை கைவிடாத விராட் கோலி 28 பந்துகளில் 49 ரன்களும், அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய தினேஷ் கார்த்திக் 7 பந்துகளில் 17 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்துள்ள இந்திய அணி 237 ரன்கள் குவித்துள்ளது.

இந்தநிலையில், கடைசி ஓவரில் 49 ரன்களைச் சேர்த்த முறுமுனையில் இருந்த விராட் கோலியுடன், ஸ்டிரைக்கர் எண்டில் இருந்த தினேஷ் கார்த்திக் என்ன செய்வதென்று கேட்டார். அப்போது தனது அரைசதத்தையும் பொறுட்படுத்தாத விராட் கோலி, உனக்கு என்ன செய்ய வேண்டுமோ அதனை செய் என்று கூறினார். 

 

இதையடுத்து தினேஷ் கார்த்திக், ரபாடா வீசிய கடைசி ஓவரில் ஒரு பவுண்டரி, 2 சிக்சர்களை விளாசி 18 ரன்களைச் சேர்த்தார். இந்நிலையில் இக்காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை