கம்பேக்கிற்காக தயாராகும் ஸ்ரேயாஸ் - வைரல் வீடியோ!
இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்தவர் ஸ்ரேயாஸ் ஐயர். இவர் இங்கிலாந்துக்கு எதிரான தொடரின் போது தோள்பட்டையில் காயமடைந்து, அந்த தொடரிலிருந்து விலகியதுடன், ஐபிஎல்லிலும் ஆடவில்லை.
ஸ்ரேயாஸ் ஐயர் ஆடாததால், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக ரிஷப் பந்த் வழிநடத்தினார். இதற்கிடையே தோள்பட்டையில் ஷ்ரேயாஸ் ஐயருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், 3-4 மாதங்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில், அவர் தோள்பட்டைக்கு கஷ்டம் கொடுக்கும் வகையில் பயிற்சி செய்யக்கூடாது என்றாலும், இலங்கை தொடரில் கம்பேக் கொடுக்கும் முனைப்பில் சிறு சிறு பயிற்சிகளை தொடங்கிவிட்டார்.
ஜூலை மாதம் இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. அந்த தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் ஆடினால் அவர் தான் கேப்டன்.
அதன்பின்னர் டி20 உலக கோப்பை நடக்கவுள்ளதால், அதற்கான இந்திய அணியில் இடம்பெற, இலங்கைக்கு எதிரான தொடரில் சிறப்பாக ஆடும் முனைப்பில் இருக்கும் ஸ்ரேயாஸ் ஐயர், தோள்பட்டைக்கு ஒர்க் அவுட் ஆகும் வகையில் சிறு சிறு உடற்பயிற்சிகளை செய்து வருகிறார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிறது.