105 மீட்டருக்கு பறந்த சிக்ஸர்; வைரலாகும் சோம்பால் கமியின் காணொளி!

Updated: Sat, Jun 15 2024 12:25 IST
Image Source: Google

தென் ஆப்பிரிக்கா - நேபாள் அணிகள் மோதிய ஐசிசி டி20 உலகக்கோப்பை லீக் போட்டி இன்று செயின்ட் வின்செண்டில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணியில் ரீஸா ஹென்றிக்ஸைத் தவிர்த்து மற்ற வீரர்கள் யாரும் சோபிக்காததால் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணியானது 7 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்களை மட்டுமே சேர்த்தது.

இதில் அதிகபட்சமாக தொடக்க வீரர் ரீஸா ஹென்றிஸ் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 43 ரன்களை குவித்தார். நேபாள் அணி தரப்பில் சிறப்பாக பந்துவிசிய குஷால் புர்டெல் 4 விக்கெட்டுகளையும், திபேந்திர சிங் ஐரி 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினார். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய நேபாள் அணியிலும் குஷால் புரெடல், கேப்டன் ரோஹித் பௌடல் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர்.

அதன்பின் இணைந்த ஆசிஃப் ஷேக் - அனில் ஷா இணை அதிரடியாக விளையாடியதுடன் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்து அசத்தினார். ஆனால் அதன்பின் களமிறங்கிய வீரர்களாக இலக்கை எட்ட முடியாததால் நேபாள் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை 114 ரன்களை மட்டுமே எடுத்ததுடன் ஒரு ரன் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியிடம் போராடி தோல்வியைத் தழுவியுள்ளது. 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ICC (@icc)

இந்நிலையில் இப்போட்டியில் நேபாள் அணி தோல்வியைத் தழுவினாலும் அந்த அணி வீரர் சோம்பால் கமி அடித்த சிக்ஸர் குறித்த காணொளியானது ரசிகர்களை கவர்ந்துள்ளது. அதன்படி ஆன்ரிச் நோர்ட்ஜே வீசிய 19ஆவது ஓவரின் 5ஆவது பந்தை எதிர்கொண்ட சோம்பால் கமி அதனை மைதானத்திற்கு வெளியே சிக்ஸர் அடித்தார். அந்த சிக்ஸரானது 105 மீட்டருக்கு சென்றது. இந்நிலையியில் இக்காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை