அயர்லாந்து - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இதில் நடந்து முடிந்த முதல் இரண்டு போட்டிகளிலும் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றதுடன் 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றியது.

Advertisement

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி கேப்டன் பால் ஸ்டிர்லிங் மற்றும் ஹாரி டெக்டர் ஆகியோரது அரைசதங்கள் மூலம் 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 284 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் பால் ஸ்டிர்லிங் 88 ரன்களும், ஹாரி டெக்டர் 60 ரன்களையும் சேர்த்தார். தென்ஆப்பிரிக்கா தரப்பில் லிசாத் வில்லியம்ஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Advertisement

இதனையடுத்து 285 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி தொடக்கத்திலேயே ரியான் ரிக்கெல்டன் 4 ரன்னிலும், ஹென்ரிக்ஸ் 1 ரன்னிலும், வான் டெர் டுஸ்சன் 3 ரன்னிலும் வெளியேறினார். அதன்பின் தென்ஆப்பிரிக்கா அணியால் சரிவில் இருந்து மீள முடியவில்லை. இதில் ஜேசன் ஸ்மித் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து விளையாடியதுடன் 91 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். 

இதன் காரணமாக தென் ஆப்பிரிக்க அணியானது 46.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 215 ரன்னிற்கு ஆல்அவுட் ஆனது. அயர்லாந்து அணி தரப்பில் கிரஹாம் ஹூம், கிரேக் யங் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன்மூலம் அயர்லாந்து அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி வெற்றி பெற்றது. மேலும் பால் ஸ்டிர்லிங் ஆட்ட நாயகன் விருதையும், தென்ஆப்பிரிக்கா பந்து வீச்சாளர் லிசாத் வில்லியம்ஸ் தொடர் நாயகன் விருதை வென்றார்.

 

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

இந்நிலையில் இப்போட்டியின் போது தென் ஆப்பிரிக்க அணியின் பேட்டிங் பயிற்சியாளர் ஜேபி டுமினி களத்தில் இறங்கி ஃபீல்டிங் செய்த சம்பவம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஏனெனில் நேற்று போட்டி நடைபெற்ற சூழலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், பெரும்பாலான வீரர்கள் சோர்வடைந்து பெவிலியன் திரும்பினர். இதன் காரணமாக பயிற்சியாளரான டுமினி களத்தில் இறங்கி ஃபீல்டிங் செய்ததுடன், பவுண்டரியும் தடுத்து அசத்தினார். இந்நிலையில் இக்காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News