IND vs NZ: ரன் அவுட் குறித்து வாஷிங்டன் சுந்தர் ஓபன் டாக்!

Updated: Mon, Jan 30 2023 15:59 IST
WATCH: Sundar gets run out after being involved in a horrible mix-up with Suryakumar, latter admits (Image Source: Google)

ஜனவரி 29ஆம் தேதி லக்னோ மைதானத்தில் நடைபெற்ற இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி டாஸ் வெற்று பேட்டிங் தேர்வு செய்தது. இந்த மைதானம் சுழற்பந்து வீச்சிற்கு நன்றாக இருக்கும் என்பதால் யுஸ்வேந்திர சகல் பிளேயிங் லெவனில் எடுத்து வரப்பட்டார். அதற்கேற்றார்போலவே இந்திய அணி சுழற்பந்து வீச்சாளர்கள் மளமளவென நியூசிலாந்து பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை கைப்பற்றினர். ரன்களையும் கட்டுப்படுத்தினர்.

நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் எவரும் 20 ரன்களை எட்டவில்லை. 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 99 ரன்கள் அடித்தது. குறைந்த இலக்கை பின்தொடர்ந்து இந்திய பேட்ஸ்மேன்கள் களமிறங்கினர். இந்திய பேட்ஸ்மேன்களுக்கும் சவாலாகவே இருந்தது. 3 விக்கெட்டுகளை 50 ரன்களுக்குள் இழந்து தடுமாறியபோது வாஷிங்டன் சுந்தர் உள்ளே வந்தார். அவருக்கும் சூரியகுமார் யாதவிற்கும் இடையில் குழப்பம் ஏற்பட்டதால், வாஷிங்டன் சுந்தர் ரன் அவுட் மூலம் வெளியேற்றப்பட்டார்.

இதில் வாஷிங்டன் எளிதாக தனது விக்கெட்டை காப்பாற்றியிருக்கலாம். ஆனால் சூரியகுமார் யாதவிற்காக விட்டுக்கொடுத்து வெளியேறினார். இறுதியாக ஹர்திக் பாண்டியா, சூரியகுமார் யாதவ் இருவரும் களத்தில் நின்று வெற்றியை உறுதி செய்தனர். இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

ஆட்டநாயகனாக சூரியகுமார் யாதவ் தேர்வு செய்யப்பட்டார். அதன்பின் வாஷிங்டன் சுந்தர் பேட்டி கொடுத்தார். பேட்டியின்போது சூர்யகுமார் ரன் அவுட் செய்ததை பற்றியும் பேசினார். அப்போது பேசிய அவர், “சூர்யகுமார் இறுதிவரை நின்றால் ஆட்டத்தை  சிறப்பாக முடித்து கொடுப்பார் என நினைத்தேன். அதன் காரணமாகவே எனது விக்கெட்டை தியாகம் செய்தேன். மிடில் ஓவர்கள் சற்று சிக்கலானது. 

அப்போது வீரர்கள் இடையே சில தயக்கங்கள் வருவது இயல்பு. அதுபோல ஒன்று தான் நடந்தது. சூரியகுமார் கடைசிவரை நின்று ஆட்டத்தை வென்று கொடுத்ததில் மகிழ்ச்சி. 10, 12 போட்டிகளில் இதுபோன்று ஒன்றிரண்டு குறைந்த ஸ்கொர் ஆட்டங்கள் இருக்கும். அப்படி இருப்பது சுழற்பந்து வீச்சாளர்களின் முழு திறமையை பரிசோதிக்கும். வெற்றியில் முடிந்தது சந்தோஷத்தை கொடுக்கிறது.” என்றார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை