சூர்யகுமாரின் விக்கெட்டை வீழ்த்திய திலக் வர்மா - காணொளி!

Updated: Wed, Mar 19 2025 12:45 IST
Image Source: Google

ஐபிஎல் தொடர் நெருங்கியுள்ள நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் ஃபார்மை இழந்து தடுமாறி வருகிறார். ஏனெனில் அவர் இந்திய டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டதில் இருந்து அவரின் பேட்டில் இருந்து ரன்கள் வருவதும் குறைய தொடங்கியுள்ளது. 

குறிப்பாக தென் ஆப்பிரிக்க டி20 தொடர், இங்கிலாந்து டி20 தொடர்களில் ரன்களைச் சேர்க்க தவறிய சூர்யகுமார் யாதவ், உள்ளூர் கிரிக்கெட் தொடர்களிலும் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க தவறினார். இதனால் எதிவரும் ஐபிஎல் தொடரை அவர் எவ்வாறு அனுக போகிறார் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. மேற்கொண்டு அதற்கான பயிற்சியிலும் சூர்யகுமார் யாதவ் ஈடுப்பட்டு வருகிறார். 

இந்நிலையில் நேற்றைய தினம் சூர்யகுமார் யாதவ் அணியின் பகுதிநேர பந்துவீச்சாளரான திலக் வர்மா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். அதன்படி மும்பை இந்தியன்ஸ் தனது அதிகாரப்பூர்வ கணக்கிலிருந்து மும்பை வீரர்களின் பயிற்சி காணொளியை பகிர்ந்துள்ளது, அதில் பகுதி நேர பந்து வீச்சாளர் திலக் வர்மா பந்துவீச்சு பயிற்சியில் ஈடுப்பட்டுள்ளார். அதிரடி பேட்டரான இவர் இதற்சமயம் தனது பந்துவீச்சையும் மேம்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளார். 

அப்போது திலக் வர்மாவின் பந்துவீச்சை எதிர்கொண்ட சூர்யகுமார் யாதவ் ஆஃப் சைடுக்கு வெளியே சென்ற பந்தை ஸ்வீப்ப் ஷாட் ஆட முயற்சித்த நிலையில் கேட்ச் கொடுத்து தனது விக்கெட்டை இழந்தார். ஏற்கெனவே மோசமான ஃபார்மில் இருக்கும் சூர்யகுமார் யாதவ், தற்சமயம் பகுதிநேர பந்துவீச்சாளர்களுக்கு எதிராக தடுமாறுவது ரசிகர்களை ஏமாற்றமடைய செய்துள்ளது. இந்நிலையில் சூர்யகுமார் யாதவ் விக்கெட்டை இழந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இன்னும் சில தினங்களில் நடைபெறவுள்ள நிலையில், இத்தொடரின் ‘எல் கிளாசிகோ’ என்றழைக்கப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி மார்ச் 23ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இப்போட்டிக்குள் மும்பை இந்தியன்ஸின் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் தனது ஃபார்மை மீட்டெடுப்பாரா என்ற கேள்விகள் அதிகரித்துள்ளன. 

Also Read: Funding To Save Test Cricket

மும்பை இந்தியன்ஸ்: ஹர்திக் பாண்டியா (கேப்டன்), ஜஸ்பிரித் பும்ரா, ரோஹித் சர்மா, திலக் வர்மா, டிரென்ட் போல்ட், நமன் திர், ராபின் மின்ஸ், கரன் சர்மா, ரியான் ரிக்கெல்டன், தீபக் சாஹர், முஜீப் உர் ரஹ்மான்*, வில் ஜாக்ஸ், அஷ்வனி குமார், மிட்செல் சான்ட்னர், ரீஸ் டாப்லி, ஸ்ரீஜித் கிருஷ்ணன், ராஜ் அங்கத் பாவா, வெங்கட் சத்யநாராயண ராஜு, பெவோன் ஜேக்கப்ஸ், அர்ஜுன் டெண்டுல்கர், லிசாத் வில்லியம்ஸ், விக்னேஷ் புத்தூர், சூர்யகுமார் யாதவ்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை