6,6,4,6 - முகமது அமீரின் ஓவரை பிரித்து மேய்ந்த டிம் செய்ஃபெர்ட்! - வைரலாகும் காணொளி!

Updated: Wed, Sep 04 2024 12:03 IST
Image Source: Google

கரீபியன் பிரிமியர் லீக் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் மற்றும் செயின்ட் லூசியா கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஃபால்கன்ஸ் அணியில் ஜஸ்டின் க்ரீவ்ஸ், இமாத் வசிம், ஃபகர் ஸமான் ஆகியோரைத் தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். 

இதனால் ஃபால்கன்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ஜஸ்டின் க்ரீவ்ஸ் 36 ரன்களையும், ஆட்டமிழக்காமல் இருந்த இமாத் வசிம் 29 ரன்களையும் சேர்த்தனர். கிங்ஸ் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய நூர் அஹ்மத் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய லூசியா கிங்ஸ் அணியும் சீரான வேகத்தில் விக்கெட்டுகளை இழந்தது. 

இதில் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் 28 ரன்களுக்கும், பனுகா ராஜபக்ஷா 9 ரன்களுக்கும், அக்கீன் அகஸ்டே 27 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்தனர். அதேசமயம் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜான்சன் சார்லஸ் 47 ரன்களையும், டிம் செஃபெர்ட் 26 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் லூசியா கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்திய ஃபால்கன்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. 

இந்நிலையில் இப்போட்டியில் செயின்ட் லூசியா கிங்ஸ் அணி வெற்றிபெற கடைசி ஓவர்களுக்கு 22 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. அப்போது ஃபால்கன்ஸ் அணி தரப்பில் 17ஆவது ஓவரை முகமது அமீர் வீச, அதனை எதிர்கொண்ட டிம் செய்ஃபெர்ட் அந்த ஓவரின் முதலிரண்டு பந்துகளையும் சிக்ஸருக்கு பறக்கவிட்டார். அதனத்தொடர்ந்து மூன்றாவது பந்தில் பவுண்டரியையும், நான்காவது பந்தில் ஒரு ரன்னையும் எடுத்தார். 

 

Also Read: Funding To Save Test Cricket

பிறகு அந்த ஓவரின் கடைசி பந்தையும் டிம் செய்ஃபெர்ட் எதிர்கொண்டதுடன் அதனையும் சிக்சருக்கு விளாசி அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். மேலும் அந்த ஓவரில் 3 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி என மொத்தமாக 24 ரன்களையும் செயின்ட் லூசியா கிங்ஸ் அணியானது சேர்த்தது. இந்நிலையில் முகமது அமீர் பந்துவீச்சில் டிம் செய்ஃபெர்ட் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை