ரோஹித் சர்மாவை க்ளீன் போல்டாக்கிய டிம் சௌதீ - வைரலாகும் காணொளி!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டி பெங்களூவில் உள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.
அதன்படி களமிறங்கிய இந்திய அணி இப்போட்டியில் மிக மோசமான தொடக்கத்தை பெற்றுள்ளது. அதிலும் அணியின் டாப் ஆர்டர் வீர்ர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதில் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் பெயரும் அடங்கும். அதன்படி இப்போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கிய ரோஹித் சர்மா 2 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.
அதன்படி இந்த இன்னிங்ஸின் தொடக்கம் முதலே ரன்களைச் சேர்க்க தடுமாறி வந்த ரோஹித் சர்மா அழுத்தத்திற்கு உள்ளாகினார். இதனால் அதிரடியாக விளையாடும் முனைப்பில் இறங்கி வந்து விளையாட முயற்சித்தார். அதன்படி நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிம் சௌதீயின் ஓவரில் ரோஹித் சர்மா இறங்கி வந்து அடிக்க முயற்சித்த நிலையில், அவர் அந்த பந்தை தவறவிட்டார். ஆனால் பந்து நேராக ஸ்டம்புகளை தாக்கியது.
இந்நிலையில் டிம் சௌதீ பந்துவீச்சில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா க்ளீன் போல்டான காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. அவரைத் தொடர்ந்து வந்த நட்சத்திர வீரர் விராட் கோலி மற்றும் சர்ஃப்ராஸ் கான் ஆகியோரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டை இழக்க, இந்திய அணியானது 10 ரன்களுக்குள்ளயே 3 விக்கெட்டுகளையும் இழந்து தடுமாறியது.
இந்தியா பிளேயிங் லெவன்: ரோஹித் சர்மா (கே), யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, கேஎல் ராகுல், சர்பராஸ் கான், ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்
Also Read: Funding To Save Test Cricket
நியூசிலாந்து பிளேயிங் லெவன்: டாம் லாதம்(கே), டெவோன் கான்வே, வில் யங், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், டாம் பிளென்டெல், கிளென் பிலிப்ஸ்,மேட் ஹென்றி, டிம் சௌதீ, அஜாஸ் படேல், வில்லியம் ஓ ரூர்க்