ஆர்ச்சர் பந்துவீச்சில் 105மீ சிக்ஸரை விளாசிய டிராவிஸ் ஹெட் - காணொளி!

ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் களைகட்ட தொடங்கியுள்ளது. இதில் இன்று நடைபெற்று வரும் இரண்டாவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றனர்.
ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அதிரடியாக தொடங்கிய அபிஷேக் சர்மா 24 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.
மறுபக்கம் அதிரடியாக விளையாடிய டிராவிஸ் ஹெட்டும் தனது பங்கிற்கு அரைசதம் கடந்ததுடன் 9 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 67 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். இதனையடுத்து இணைந்துள்ள இஷான் கிஷான் - நிதீஷ் ரெட்டி இணை சிறப்பான் ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தி வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டியில் டிராவிஸ் ஹெட் விளாசிய சிக்ஸர் ஒன்று ரசிகர்களை வாயடைக்க செய்துள்ளது.
அதன்படில், இன்னிங்ஸின் 5ஆவது ஓவரை ராஜஸ்தான் தரப்பில் ஜோஃப்ரா ஆர்ச்சர் வீசிய நிலையில் அந்த ஓவரின் முதல் பந்தை டிராவிஸ் ஹெட் பவுண்டரி விளாசிய நிலையில், அடுத்த பந்த டீப் மிட் விக்கெட் திசையில் இமாலய சிக்சரை பறக்கவிட்டார். அதிலும் குறிப்பாக அந்த சிக்ஸரானது 105 மீட்டர் தூரத்திற்கு சென்றது. இந்நிலையில் டிராவிஸ் ஹெட் விளாசிய இந்த இமாலய சிக்ஸர் குறித்த காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ராஜஸ்தான் ராயல்ஸ் (பிளேயிங் லெவன்): யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுபம் துபே, நிதிஷ் ராணா, ரியான் பராக் (கேப்டன்), துருவ் ஜூரெல், ஷிம்ரான் ஹெட்மையர், ஜோஃப்ரா ஆர்ச்சர், மஹீஷ் தீக்ஷனா, துஷார் தேஷ்பாண்டே, சந்தீப் சர்மா, ஃபசல்ஹாக் ஃபரூக்கி.
இம்பேக்ட் வீரர்கள் - சஞ்சு சாம்சன், குணால் சிங் ரத்தோர், ஆகாஷ் மத்வால், குமார் கார்த்திகேயா, க்வேனா மபாகா
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (பிளேயிங் லெவன்): டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், நிதிஷ் குமார் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென்(விக்கெட் கீப்பர்), அனிகேத் வர்மா, அபினவ் மனோகர், பாட் கம்மின்ஸ்(கேப்டன்), சிமர்ஜீத் சிங், ஹர்ஷல் படேல், முகமது ஷமி.
Also Read: Funding To Save Test Cricket
இம்பேக்ட் வீரர்கள்: சச்சின் பேபி, ஜெய்தேவ் உனத்கட், ஜீஷான் அன்சாரி, ஆடம் ஜம்பா, வியான் முல்டர்