ஐபிஎல் 2022: மீண்டும் கம்பேக் கொடுத்த விண்டேஜ் தோனி!

Updated: Sun, May 08 2022 22:32 IST
Image Source: Google

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்க்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் குவித்தது.

தொடக்க ஜோடி 11 ஓவரில் 110 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கான்வே 49 பந்துகளில் 7 பவுண்டரி, 5 சிக்ஸருடன் 87 ரன்கள் விளாசினார். தொடர்ந்து, ருத்துராஜ் 41 ரன்களும், ஷிவம் துபே 32 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

அதன்பின் களமிறங்கிய மகேந்திர சிங் தோனி சந்தித்த இரண்டாவது பந்தே சிக்சருக்கு பறக்கவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தினார். அதன்பின் மூன்றாவது பந்தை பவுண்டரிக்கு விளாசினார். 

 

இப்போட்டியில் 8 பந்துகளை மட்டுமே சந்தித்த தோனி 2 சிக்சர், ஒரு பவுண்டரி உள்பட 21 ரன்களைச் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதையடுத்து 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி விளையாடி வருகிறது.

இந்நிலையில் தோனி அதிரடியாக விளையாடிய காணொளி தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை