ஐபிஎல் 2023: முதல் பந்திலேயே விராட் கோலியை வெளியேற்றிய டிரெண்ட் போல்ட்!

Updated: Sun, Apr 23 2023 16:16 IST
Image Source: Google

வார இறுதியான இன்று ஐபிஎல் தொடரில் இரண்டு லீக் போட்டிகள் நடைபெற உள்ளன. அதன்படி 32ஆவது லீக்  போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. 

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ராஜஸ்தான் ராயல் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்துள்ளார். அதேசமயம் இன்றைய போட்டிக்கான ஆர்சிபி அணியை விராட் கோலி வழிநடத்துகிறார். 

அதன்படி ஆர்சிபி அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் விராட் கோலி - ஃபாஃப் டூ பிளெசிஸ் இணை களமிறங்கியது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தரப்பில் முதல் ஓவரை வீசிய டிரெண்ட் போல்ட், முதல் பந்திலேயே விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்தி ஆர்சிபி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். 

 

மேலும் இது டிரெண்ட் போல்ட்டின் 100ஆவது ஐபிஎல் விக்கெட்டாகவும் அமைந்தது. இந்நிலையில் விராட் கோலி முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்த காணொளி இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை