உலகக்கோப்பையில் முதல் முறையாக டக் அவுட்டான விராட் கோலி; வைரல் காணொளி!

Updated: Sun, Oct 29 2023 17:10 IST
உலகக்கோப்பையில் முதல் முறையாக டக் அவுட்டான விராட் கோலி; வைரல் காணொளி! (Image Source: Google)

ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று லக்னோவில் நடைபெற்ற 29வது லீக் போட்டியில் வலுவான நடப்பு சாம்பியன் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் மோதின. இந்த போட்டியில் ஏற்கனவே 4 தோல்விகளை பதிவு செய்து செமி ஃபைனல் வாய்ப்பை ஏறத்தாழ தவற விட்ட இங்கிலாந்து டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

குறிப்பாக ஆஃப்கானிஸ்தான், இலங்கை போன்ற அணிகளிடம் தோல்வியை சந்தித்ததால் தங்களுடைய தரத்தை நிரூபிக்க இப்போட்டியில் நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் எங்களது களமிறங்கியது. மறுபுறம் ஏற்கனவே 5 தொடர் வெற்றிகளை பதிவு செய்த இந்தியா இந்த போட்டியிலும் இங்கிலாந்தை சொந்த மண்ணில் தோற்கடித்து 6ஆவது வெற்றியை பதிவு செய்யும் முனைப்புடன் விளையாடியது.

ஆனாலும் இப்போட்டியில் சுழலுக்கு சாதகமான மைதானத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின் தேர்வு செய்யப்படாமல் இந்திய அணியில் எந்த மாற்றமும் நிகழ்த்தப்படவில்லை. அதைத் தொடர்ந்து தொடங்கிய போட்டியில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்தியாவுக்கு ரோஹித் சர்மா வழக்கம் போல அதிரடியாக விளையாடிய போதிலும் எதிர்ப்புறம் தடுமாறிய ஷுப்மன் கில் 9 ரன்களில் கிறிஸ் ஓக்ஸ் வேகத்தில் கிளீன் போல்டானார்.

அந்த சூழ்நிலையில் வந்த நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி நங்கூரமாக விளையாடுவதற்காக நிதானத்தை காட்டிய போதிலும் 9 பந்துகளை எதிர்கொண்டு டேவிட் வில்லி வேகத்தில் கேட்ச் கொடுத்து டக் அவுட்டானது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாகவும் இந்தியாவுக்கு பின்னடைவாகவும் அமைந்தது. சொல்லப்போனால் கடந்த 2011 முதல் விளையாடி வரும் அவர் தம்முடைய கேரியரில் உலகக் கோப்பையில் டக் அவுட்டாவது இதுவே முதல் முறையாகும்.

அதை விட இதையும் சேர்த்து சர்வதேச கிரிக்கெட்டில் 1 – 7 வரையிலான இடங்களில் களமிறங்கி அதிக முறை டக் அவுட்டான வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் மோசமான சாதனையையும் விராட் கோலி இப்போட்டியில் சமன் செய்துள்ளார். 

 

  • சச்சின் டெண்டுல்கர்/விராட் கோலி : தலா 34*
  • வீரேந்தர் சேவாக் : 31
  •  ரோகித் சர்மா : 30
  • சௌரவ் கங்குலி : 28

 

அப்படி உலகக்கோப்பையில் முதல் முறையாக சறுக்கிய விராட் கோலி ஏமாற்றத்தை கொடுதத்தால்  இந்திய அணி  27/2 என இந்த போட்டியில் சுமாரான தொடக்கத்தைப் பெற்றது. இந்நிலையில் விராட் கோலி ஆட்டமிழந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை