ரன் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்த விராட் கோலி; வைரலாகும் காணொளி!

Updated: Fri, Nov 01 2024 21:09 IST
Image Source: Google

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பையில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் டாம் லேதம் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில், வில் யங் மற்றும் டேரில் மிட்செலின் அரைசதங்கள் அடித்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இதனால் நியூசிலாந்து அணியானது முதல் இன்னிங்ஸில் 235 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக டேரில் மிட்செல் 82 ரன்களையும், வில் யங் 71 ரன்களையும் சேர்த்தனர்.

இந்திய அணி தரப்பில் ஜடேஜா 5 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகளையும், ஆகாஷ் தீப் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, இந்தியா முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா - யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். இதில் ரோஹித் சர்மா 18 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். 

அதன்பின் இணைந்த ஷுப்மன் கில் - யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் இரண்டாவது விக்கெட்டிற்கு 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 30 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய முகமது சிராஜ் ரன்கள் ஏதுமின்றியும், விராட் கோலி 4 ரன்னில் நடையைக் கட்டினார். இதனால் முதல் நாள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 86 ரன்களை எடுத்துள்ளது. இதில் ஷுப்மன் கில் 31 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

 

இந்நிலையில் இப்போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி பவுண்டரி அடித்து ரன் கணக்கை தொடங்கிய நிலையில், அடுத்த பந்திலேயே சிங்கிள் எடுக்கும் முயற்சியில் ரன் அவுட்டாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார். அதன்படி, ரச்சின் ரவீந்திரா பந்துவீசிய 19ஆவது ஓவரின் மூன்றாவது பந்தில் விராட் கோலி மிட் ஆன் திசையில் அடித்த கையோடு ரன் எடுப்பதற்காக நான் ஸ்டிரைக்கர் எண்டை நோக்கி ஓடினார்.

Also Read: Funding To Save Test Cricket

அதேசமயம் மிட் ஆன் திசையில் ஃபீல்டிங் செய்துகொண்டிருந்த மேட் ஹென்றி பந்தை பிடித்த கையோடு ஸ்டம்பை நோக்கி த்ரோ அடித்தார். அதேசமயம் மறுபக்கம் ரன் அவுட்டில் இருந்து தப்பிக்க விராட் கோலி டைவ் அடித்த நிலையிலும், அவர் கிரீஸை எட்டுவதற்குள் பந்து ஸ்டம்புகளை தக்கியது. இதனால் விராட் கோலி மீண்டும் ஒருமுறை சொற்ப ரன்னில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். இந்நிலையில் விராட் கோலி ஆட்டமிழந்த காணொளி வைரலாகி வருகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை