அறிமுக போட்டியில் சிறப்பான கேட்சை பிடித்த ஜெய்ஸ்வால் - வைரலாகும் காணொளி!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று (பிப்ரவரி 6) தொடங்கிய. நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து இந்திய அணியை பந்துவீச அழைத்ததார்.
இப்போட்டிக்கான இங்கிலாந்து அணியில் ஜோ ரூட், ஜேக்கப் பெத்தெல் மற்றும் சாகிப் மஹ்மூத் ஆகியோர் பிளேயிங் லெவனில் இடம்பிடித்தனர். அதேசமயம் இந்திய அணியில் காயம் காரணமாக விராட் கோலி விளையாடாத நிலையில், அறிமுக வீரர்கள் யஷஸ்வி ஜெய்வ்ஸால், ஹர்ஷித் ரானா ஆகியோர் பிளேயிங் லெவனில் வாய்ப்பு பெற்றனர். அவர்களுடன் காயத்தில் இருந்து மீண்டுள்ள முகமது ஷமி மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோரும் பிளேயிங் லெவனில் இடம்பிடித்திருந்தனர்.
இதையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு பில் சால்ட் மற்றும் பென் டக்கெட் இணை தொடக்கம் கொடுத்தனர். தொடக்கத்தில் இருவரும் நிதானமாக விளையாடிய நிலையில், 5ஆவது ஓவருக்கு பிறகு அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்த முதல் விக்கெட்டிற்கு 75 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர்.
அதன்பின் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பில் சல்ட் 43 ரன்களிலும், பென் டக்கெட் 32 ரன்களிலும் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஹாரி புரூக் ரன்கள் ஏதுமின்றியும், ஜோ ரூட் 19 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர். இதனால் இலங்கை அணி 111 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதையடுத்து ஜோடி சேர்ந்துள்ள ஜோஸ் பட்லர் - ஜேக்கப் பெத்தெல் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இப்போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஃபீல்டிங்கில் அபாரமான கேட்சை பிடித்து அசத்தினார். அதன்படி இன்னிங்ஸில் 10ஆவது ஓவரை ஹர்ஷீத் ரான வீசிய நிலையில் ஓவரின் மூன்றாவது பந்தை ஷாட் பந்தாக வீசினார். அதனை புல் ஷாட் அடிக்கும் முயற்சியில் விளையாடிய பென் டக்கெட் பந்தின் வேகத்தை சரியாக கணிக்காததன் காரணமாக, பந்து பேட்டிங் மேல் பகுதியில் பட்டு மிட் விக்கெட் திசையை நோக்கி சென்றது.
Also Read: Funding To Save Test Cricket
இந்நிலையில் அத்திசையில் ஃபீல்டிங் செய்துகொண்டிருந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் பின் பக்கமாக ஓடியதுடன் டைவ் அடித்து கேட்ச் பிடித்து அசத்தினார். இதன்மூலம் ஹர்ஷீத் ரானா சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் விக்கெட்டை கைப்பற்றிய நிலையில், ஜெய்ஸ்வாலும் தனது முதல் கேட்சை எடுத்தார். இந்நிலையில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் பிடித்த இந்த கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.