மகளிர் பிக் பேஷ் லீக் டி20 தொடரின் 7ஆவது லீக் ஆட்டத்தில் பிரிஸ்பேன் ஹீட் - பெர்த் ஸ்காச்சர்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஸ்காச்சர்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய பிரிஸ்பேன் அணிக்கு கிரேஸ் ஹாரிஸ் - ஜார்ஜியா ரெட்மெய்ன் இணை அதிரடியான தொடக்கத்தை கொடுத்தனர். இதில் ரெட்மெய்ன் அரைசதம் கடந்தார்.
இதனால் 20 ஓவர்களில் பிரிஸ்பேன் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ரெட்மெய்ன் 59 ரன்களை விளாசினார்.
இதையடுத்து இலக்கை துரத்திய பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி தொடக்கம் முதலே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனால் அந்த அணி 17.2 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 103 ரன்களை மட்டுமே எடுத்தது. பிரிஸ்பேன் அணி தரப்பில் நிக்கோலஸ் ஹேங்காக், கிரேஸ் ஹாரிஸ் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதன்மூலம் பிரிஸ்பேன் ஹீட் மகளிர் அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் பெர்த் ஸ்காச்சர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.